New Tata Avinya concept EV Leaked, offers 500 km range in 30-minute recharge: காரின் ரேன்ஜ் இந்திய சாலைகளுக்கு ஏற்ப அதிகமாகவே இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மில்லிமீட்டர்களாக இருக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா அவின்யா கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது முதல், இந்த மாடலின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய டாடா அவின்யா மாடல் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாடல் எப்படி இருக்கும் என பல ரெண்டர்கள் வெளியாகி விட்டன.
முந்தைய கான்செப்ட் மாடல்களை போன்று இல்லாமல், புதிய அவின்யா கான்செப்ட் வெர்ஷன் கிட்டத்தட்ட ப்ரோடக்ஷன் மாடலை போன்றே காட்சி அளிக்கிறது. புதிய டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ஜென் 3 ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2025 வாக்கில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.
பெரிய பேட்டரி:
தற்போதைய தகவல்களின் படி புதிய டாடா அவின்யா 4.6 மீட்டர் அல்லசு 4.7 மீட்டர் அளவில் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும். இது காரின் வீல்பேஸ்-ஐ நீட்டிக்க செய்கிறது. இந்த காரில் பெரிய பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் காரின் ரேன்ஜ் இந்திய சாலைகளுக்கு ஏற்ப அதிகமாகவே இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மில்லிமீட்டர்களாக இருக்கும்.
டாடா மோட்டார்ஸ் சமீப காலங்களில் அறிமுகம் செய்த ஹேரியர், அல்ட்ரோஸ் மற்றும் டாடா பன்ச் மாடல்களை போன்றே தனது ப்ரோடக்ஷன் ரெடி வெர்ஷன் அதன் ரோட்-லீகல் வெர்ஷனுக்கு இணையாகவே உருவாக்கி வருகிறது. புது எலெக்ட்ரிக் மாடலை பொறுத்தவரை 22 இன்ச் வீல்களுக்கு மாற்றாக 18 அல்லது 19 இன்ச் வீல்கள் வழங்கப்படலாம். இதுவே இந்திய சாலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
ரேன்ஜ்:
டாடா மோட்டார்ஸ் டிசைன் குழு அவின்யா திட்டத்தில் எட்டு மாதங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறது. இந்த காரின் கான்செப்ட் மற்றும் ப்ரோடக்ஷன் வெர்ஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குளோபல் டிசைன் பிரிவு தலைவர் மார்டின் உல்ஹாரிக் தெரிவித்தார்.
புதிய டாடா அவின்யா மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. அவின்யா மட்டும் இன்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா கர்வ் கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிகிறது.