இந்தியாவில் ஹூண்டாய் கார் விற்பனை திடீர் நிறுத்தம்... ஏன் தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published May 25, 2022, 2:55 PM IST

காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஷிப்ட் பை வயர் டாகில் ஸ்விட்ச், டச் சார்ந்த கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.


ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டு, அந்த மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதன் வெளிப்புறம் புது ஸ்டைலிங், ரிவாம்ப் செய்யப்பட்ட கேபின் மற்றும் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஹூண்டாய் டக்சன் மாடல் ஜூலை 2020 வாக்கில் அப்டேட் செய்யப்பட்டது. அதன் பின் இந்த மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள், 360 டிகிரி  கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு டெயில் கேட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்டிரானிக் பார்கிங் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

அப்டேட்:

2022 ஹூண்டாய் டக்சன் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் முற்றிலும் புது எக்ஸ்டீரியர், புது முன்புற கிரில், இண்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.-கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிளா டைப் டெயில் லேம்ப்கள், புது அலாய் வீல்கள், ரி வொர்க் செய்யப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காரின் உள்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஷிப்ட் பை வயர் டாகில் ஸ்விட்ச், டச் சார்ந்த கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலின் என்ஜின் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடலில் 2.0 லிட்டர், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். தற்போதைய மாடலில் இருந்ததை போன்றே புது மாடலிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் செட்டப் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடலின் விலை ரூ. 23 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 28 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் போக்ஸ்வேகன் டிகுவான், சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

click me!