ரூ. 11 ஆயிரம் வரை விலை குறைப்பு.. ஸ்மார்ட்போன்களுக்கு வேற லெவல் சலுகைகள்.. அமேசான் அதிரடி...!

By Kevin Kaarki  |  First Published May 25, 2022, 2:03 PM IST

அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடி துவங்கி நடைபெற்று வருகிறது. 


அமேசான் இந்தியா வலைதளத்தில் சிறப்பு ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் புது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நேற்று (மே 24) துவங்கிய சிறப்பு விற்பனை மே 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

சிறப்பு விற்பனையில் லாவா, சியோமி, சாம்சங், டெக்னோ, ஆப்பிள், ரியல்மி மற்றும் ஐகூ என பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் புது மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

Tap to resize

Latest Videos

அமேசான் ஃபேப் ஃபெஸ்ட் மே 2022 சலுகைகள்:

- ஐபோன் 12 (64GB) ரூ. 55 ஆயிரத்து 999
- லாவா அக்னி 5ஜி ரூ. 15 ஆயிரத்து 990
- லாவா X2 ரூ. 6 ஆயிரத்து 499 முதல் துவங்குகிறது
- லாவா Z21 ரூ. 4 ஆயிரத்து 799
- சாம்சங் கேலக்ஸி M12 ரூ. 10 ஆயிரத்து 499
- சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி ரூ. 36 ஆயிரத்து 999
- சாம்சங் கேலக்ஸி M32 5ஜி ரூ. 20 ஆயிரத்து 999
- சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ரூ. 24 ஆயிரத்து 999
- சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ரூ. 24 ஆயிரத்து 999
- ரெட்மி 9A ஸ்போர்ட் ரூ. 6 ஆயிரத்து 999
- ரெட்மி நோட் 11 ரூ. 13 ஆயிரத்து 999
- ரெட்மி நோட் 11S ரூ. 16 ஆயிரத்து 499
- ரெட்மி நோட் 10T 5ஜி ரூ. 13 ஆயிரத்து 999
- Mi 11X ரூ. 27 ஆயிரத்து 999
- சியோமி 11 லைட் NE 5ஜி ரூ. 26 ஆயிரத்து 999
- சியோமி 11T ப்ரோ (8GB+128GB) ரூ. 39 ஆயிரத்து 999
- டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ ரூ. 9 ஆயிரத்து 999
- டெக்னோ பாப் 5 எல்.டி.இ. ரூ. 6 ஆயிரத்து 599
- டெக்னோ ஸ்பார்க் 8T ரூ. 9 ஆயிரத்து 299
- டெக்னோ ஸ்பார்க் 8C ரூ. 8 ஆயிரத்து 799
- டெக்னோ பேண்டம் X ரூ. 25 ஆயிரத்து 999
- ஐகூ Z5 5ஜி ரூ. 23 ஆயிரத்து 999
- ஐகூ 9 5ஜி ரூ. 42 ஆயிரத்து 990
- ஐகூ 9 SE 5ஜி ரூ. 33 ஆயிரத்து 990
- ஐகூ Z6 5ஜி ரூ. 15 ஆயிரத்து 499
- ஐகூ Z3 ரூ. 17 ஆயிரத்து 990

இதர சலுகை விவரங்கள்:

அமேசான் ஃபேப் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் அசத்தலான எக்சேன்ஜ் சலுகை மற்றும் எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்ப்படுகிறது. 

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ. 20 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும். இத்துடன் ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரிபிளேஸ்மண்ட் வசதி, கூடுதலாக மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

click me!