மேலும் பயிற்சியின் போது இதய துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சிகளை பரிந்துரை வழங்கும்.
சியோமி நிறுவனத்தின் புதிய Mi பேண்ட் 7 மாடல் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பேண்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் உள்ளதை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு உள்ளது. புதிய Mi பேண்ட் 7 மாடலில் பெரிய டிஸ்ப்ளே, மேம்பட்ட ஃபிட்னஸ் அம்சங்கள் மற்றும் ஏராளமான புது வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
புதிய Mi பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 100-க்கும் அதிகமான புது வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றில் சில வாட்ச் ஃபேஸ்கள் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில், குறைந்த அளவு பேட்டரியை செலவு செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
ஏராளமான ஸ்போர்ட் மோட்கள்:
இத்துடன் 120 ஸ்போர்ட் மோட்கள், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்ளிங், ஸ்கேட் போர்டிங் மற்றும் பல்வேறு உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் பயிற்சியின் போது இதய துடிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சிகளை பரிந்துரை வழங்கும். பயனர்கள் அவர்களின் நண்பர்களுடன் தினசரி ஸ்டெப், கலோரி பயன்பாடு, ஆக்டிவிட்டி டைம் உள்ளிட்டவைகளில் சேலன்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி Mi பேண்ட் 7 மாடலில் நாள் முழுக்க பயனரின் SpO2 அளவுகளை டிராக் செய்யும் வசதி உள்ளது. இத்துடன் ஆக்சிஜன் அளவுகள் 90 சதவீதத்திற்கும் கீழ் குறையும் போது வைப்ரேஷன் மூலம் எச்சரிக்கை செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 15 நாட்களுக்கான பேக்கப் கிடைக்கிறது.
புதிய சியோமி Mi பேண்ட் 7 மாடல் பிளாக், ஆரஞ்சு, கிரீன், புளூ மற்றும் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை CNY 239 இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 777 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.