டியுனெஸ் பீட்ஸ் B60 மாடல் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
லைப்ஸ்டைல் சாதனங்கள் பிராண்டு டியுனெஸ் இந்திய சந்தையில் ஓவர்ஹெட் ரக ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. டியுனெஸ் பீட்ஸ் B60 என அழைக்கப்படும் புது ஹெட்செட் 40mm ஹெச்.டி. மேக்ஸ் பேஸ் டிரைவர், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம், நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும் குஷன்களை கொண்டிருக்கிறது.
புதிய டியுனெஸ் B60 மாடலில் 400mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது 12 மணி நேரத்திற்கான பிளே டைம், 15 மணி நேரத்திற்கான மியூசிக் பிளே, 15 மணி நேரத்திற்கான டாக்டைம், மைக்ரோ எஸ்.டி.. எப்.எம்., IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற அம்சங்கள் உள்ளன.
டியுனெஸ் பீட்ஸ் B60 அம்சங்கள்:
- 40mm HD MAXX பேஸ் டிரைவர்கள்
- ப்ளூடூத் 5
- மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
- எப்.எம். சப்போர்ட்
- IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட்
- 400mAh பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங்
- 15 மணி நேர மியூசிக் பிளேபேக்
- 15 மணி நேர டாக்டைம்
- இன்லைன் கண்ட்ரோல்
விலை விவரங்கள்:
டியுனெஸ் பீட்ஸ் B60 மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
“பல்வேறு பிரிவுகளில் மிகவும் தரமான பொருட்களை சந்தையில் அதிக போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதே எங்களின் மிகப் பெரிய சக்தி. எங்களது பொருட்களுக்கு வாரண்டி மற்றும் விற்பனைக்கு பின்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறோம். புதிய B60 ஹெட்போன் இசை ப்ரியர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தரமான இசையை அனுபவிக்க விரும்புவோருக்கு பிடித்த மாடலாக இருக்கும். மேலும் அடிக்கடி சார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டிய நிலையை இது மாற்றுகிறது,” என டியுனெஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷீத்தல் பிரசாந்த் தெரிவித்தார்.