ரூ. 599 துவக்க விலை... புது சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து மாஸ் காட்டிய வி..!

By Kevin Kaarki  |  First Published May 24, 2022, 4:40 PM IST

வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா ரோமிங் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.


வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் புதிதாக சர்வதேச ரோமிங் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புதிய வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளின் விலை ரூ. 599 என துவங்கி அதிகபட்சம் ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரூ. 5 ஆயிரத்து 999 விலை கொண்ட சர்வதேச ரோமிங் சலுகையில் 28 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகள் ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா ரோமிங் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

கூட்டணி:

தற்போது வி நிறுவனம் உலகின் 81 நாடுகளில் ரோமிங் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக வி நிறுவனம் உள்ளூர் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. பயனர்கள் தேர்வு செய்யும் சலுகைகளின் வேலிடிட்டி நிறைவு பெற்றாலும், அவர்களின் அக்கவுண்டில் இருந்து அதிக தொகை எடுக்கப்படாமல் இருக்க ஆல்வேஸ் ஆன் எனும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.

உதாரணத்திற்கு ஏழு நாட்கள் வேலிடட்டி கொண்ட வி போஸ்ட்பெயிட் ரோமிங் சலுகையை தேர்வு செய்யும் பட்சத்தில், பயணத்தை நீட்டித்தால், தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டு, எஸ்.எம்.எஸ். மற்றும் டேட்டாவை பயன்படுத்த முடியும். ரூ. 599 சலுகைக்கான அளவு நிறைவு பெறும் வரை பயனர் மேற்கொள்ளும் அழைப்புகள் மற்றும் இதர சேவைகள் சாதாரண கட்டணத்திலேயே கழிக்கப்படும். இதை கடந்து பயன்படுத்தும் போது நாள் ஒன்றுக்கு ரூ. 599 என கட்டணம் வசூலிக்கப்படும்.

வலைதளம்:

வி நிறுவன வலைதள விவரங்களின் படி ரெட் எக்ஸ் போஸ்ட்பெயிட் சந்தா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு ஒரு முறை ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்ட வி சர்வதேச ரோமிங் சலுகையை இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த சலுகையின் கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 999 ஆகும். 

click me!