AI குரலைக் கேட்டு ஏமாந்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் அபேஸ்! இந்த மாதிரி கால் வந்தா உஷாரா இருங்க...

By SG Balan  |  First Published Nov 19, 2023, 5:06 PM IST

பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்று வேலையில் இறங்குகிறார்கள். இவர்களிடம் விழிப்புணர்வு இல்லாத பலர் தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் இழந்து தவிர்க்கிறார்கள்.


சமீபத்தில், 59 வயதான ஒரு பெண், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய குரலை நம்பி, ரூ.1.4 லட்சம் நஷ்டம் அடைந்துள்ளார். கனடாவில் வசிக்கும் அவரது மருமகன் போல போனில் பேசிய குரலை அந்தப் பெண் உண்மை என்று நம்பியதால், பெரும் தொகையை இழந்திருக்கிறார்.

இந்த வகையான AI குரல் மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நமக்குத் தெரிந்த ஒருவரைப் போல AI குரல்களை உருவாக்கி இந்த் மோசடியில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்று வேலையில் இறங்குகிறார்கள். இவர்களிடம் விழிப்புணர்வு இல்லாத பலர் தங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் இழந்து தவிர்க்கிறார்கள்.

Latest Videos

 AI குரல் மோசடிகள் எப்படி நடக்கின்றன?

* குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல்: மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்து, சிக்கலில் உள்ள குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் எனக் கூறுவார்கள். அவசரமாக பணம் தேவை என்று கதை விடுவார்கள். உங்கள் பெயரையோ அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரையோ சொல்லி நம்ப வைக்க முயற்சி செய்வார்கள்.

சுமாரான போட்டோவையும் சூப்பராக மாற்றலாம்! இன்ஸ்டாகிராமில் கலர் கலரா புதிய ஃபில்டர்ஸ் அறிமுகம்!

* வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல்: வங்கி அல்லது வேறு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு ஆரம்பிப்பார்கள். தனிப்பட்ட தகவலைச் சரிபார்க்க வேண்டும் என்றோ சேவைகளைத் தொடர பணம் செலுத்த வேண்டும் என்றோ கூறுவார்கள்.

* அரசு அதிகாரியாகக் காட்டிக்கொள்வது: அரசாங்க நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறியும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். ஏதேனும் பொய் குற்றச்சாட்டைக் கூறி, அபராதம் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்துவார்கள்.

AI குரல் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி?

- அழைப்பவரின் அடையாளத்தை நீங்கள் உறுதியாக அறியாத வரையில் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் தொலைபேசியில் கொடுக்க வேண்டாம்.

- பணம் அல்லது தனிப்பட்ட தகவலை அவசரமாக கேட்கும் அழைப்பாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சந்தேகம் ஏற்பாட்டால் உடனே புகாரளிக்கவும். சைபர் கிரைம் போலீசாருக்குப் புகாரளிக்கவும்.

- மோசடி செய்பவர்கள் தொடர்ந்து விதவிதமாக திருட்டில் ஈடுபடுகின்றனர். சமீபத்திய AI குரல் மோசடிகளைப்பற்றித் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.

உங்க மொபைலில் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகுதா? நீடித்த பேட்டரி லைஃப் கிடைக்க இதை செஞ்சு பாருங்க!

click me!