ஏழு மாதங்களுக்குப் பின் இரண்டாவது முறையாக விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்ஷிப் விண்கலம் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று தனது ஸ்டார்ஷிப் விண்கலத்தை 7 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக சோதனை முறையில் விண்ணில் செலுத்தியுள்ளது.
இதுவரை அந்த நிறுவனம் உருவாக்கியதிலேயே மிகப்பெரிய ராக்கெட் ஆகும். செவ்வாய் மற்றும் சந்திரனில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்தியங்களை ஆராயும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்திற்காக ஸ்டார்ஷிப் லேண்டரை பயன்படுத்த முடிவுசெய்துள்ளது.
ஏப்ரலில் மேற்கொள்ளபட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்த சனிக்கிழமை மீண்டும் சோதனை முயற்சி தொடங்கியது. ஏறக்குறைய 400 அடி உயரம் கொண்ட விணகலம் பகுதிகளைக் கொண்டது. இரண்டும் முழுமையாகவும் விரைவாகவும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சூப்பர் ஹெவி எனப்படும் முதல் பகுதியில் பூஸ்டர் உள்ளது. மற்றொரு பகுதி 165-அடி உயரம் கொண்ட மேல் பகுதிதான் ஸ்டார்ஷிப் எனப்படுகிறது.
யூத வெறுப்பு... வார்த்தையை விட்ட எலான் மஸ்க்... விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்த ஆப்பிள், டிஸ்னி!
Liftoff of Starship! pic.twitter.com/qXnGXXZP5k
— SpaceX (@SpaceX)சூப்பர் ஹெவி பூஸ்டர் 74.3 மெகாநியூட்டன் உந்துதிறன் கொண்டது. இது உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த ராக்கெட்டின் பூஸ்டரைவிட இருமடங்கு அதிகமானது. கடந்த முறை விண்ணில் ஏவப்பட்டபோது, பூஸ்டர் பிரிக்கப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. ஆனால் இந்த முறை அதைத் தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிகழவிருந்த இந்த சோதனை முயற்சி முதலில் சனிக்கிழமை நடக்க இருந்தது. ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் சூப்பர் ஹெவி பகுதியில் கிரிட் அமைப்பில் மாற்றம் செய்யவேண்டி வந்ததால், சோதனை ஒருநாள் தாமதமானது. விண்கலத்தை ஏவிய பின்பு பூஸ்டர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு இந்த கிரிட் அமைப்பு உதவுகிறது.
ஏப்ரல் 20ஆம் தேதி ஏவப்பட்ட முதல் முயற்சியில் விண்ணில் ஏவப்பட்ட நான்கு நிமிடங்களில் ஸ்டார்ஷிப் வெடித்துச் சிதறி, மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்தது.
சுமாரான போட்டோவையும் சூப்பராக மாற்றலாம்! இன்ஸ்டாகிராமில் கலர் கலரா புதிய ஃபில்டர்ஸ் அறிமுகம்!