
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற பிரபல சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா குழுமம் அண்மையில் இரண்டாவது சுற்று பணிநீக்க நடவடிக்கையை அறிவித்தது. இதில் 10,000 ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது. அவர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரியா குஸ்மான் கார்சியா-லூனா.
இவர் தான் வேலை இழந்ததும் ஏற்பட்ட அனுபவத்தை தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுவும் கார்சியா லூனாஸ் மெட்டா நிறுவனத்தால் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
UPI பரிவர்த்தனையில் 95,000 மோசடிகள்! பணத்தை இழக்காமல் தப்பிக்க 10 ஆலோசனைகள்
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பணியாற்றி வந்த அவர் முதலில் 2018 இல் பணிநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் வேலையில் சேர்ந்த லூனா, கடந்த வாரம் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
"நவம்பர் ஆட்குறைப்புக்குப் பின் மார்ச் மாதம் 10,000 பேர் வேலை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டபோது, அதை எதிர்கொள்ள நான் தயாராக இருந்திருப்பேன் என நினைக்கலாம். ஆனால், இல்லை. என்னால் முடிந்தவரை வேலை செய் முயற்சி செய்தேன். ஆனால் அந்த நாள் வந்தது. அன்று நான் தொடர்ந்து இரண்டு மணிநேரம் அழுதேன்" என திருமதி கார்சியா-லூனா தனது பதிவில் சொல்லி இருக்கிறார்.
எஸ்பிஐ பேங்க் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! இந்த ஆவணங்கள் இருந்தா மட்டும் போதும்!
"உண்மை என்னவென்றால், இந்த அனுபவத்தினால் என் மனநலம் பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் நான் மீண்டுவர ஒரு இடைவெளி தேவை என்பதை உணர்கிறேன்" என்றும் கூறியுள்ளார். ஜூம் வீடியோ காலில் தனது சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அழுதார்கள் என்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை குறித்து உரையாடினர் என்றும் மெட்டா முன்னாள் ஊழியர் லூனா தெரிவிக்கிறார்.
எட்டு வருட இடைவிடாத வேலைக்குப் பிறகு தற்போது சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவதாக திருமதி கார்சியா-லூனா கூறுகிறார். தனது பதிவை முடிக்கும்போது, "யாராவது புதிதாதக பணியமர்த்த திட்டமிட்டிந்தால், முன்னாள் மெட்டா ஊழியர்களை வேலையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் புத்திசாலித்தனத்திற்கு என்னால் சான்றளிக்க முடியும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.