தேர்வுகளில் ChatGPT பயன்படுத்தியதால் ஒரே விடையை எழுதி மாட்டிக்கொள்ளும் மாணவர்கள்!

By SG Balan  |  First Published May 28, 2023, 2:51 PM IST

ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செயல்படும் தானியங்கி சேவை என்பதால், அது பல மாணவர்கள் ஒரே மாதிரியான பதில்களை எழுத வழிவகுக்கிறது.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட் ஜிபிடி (ChatGPT) யின் வருகைக்குப் பின் மாணவர்கள் அதை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தங்கள் ப்ராஜெக்டுகள், வீட்டுப்பாடங்கள் போன்றவற்றைச் செய்துமுடிக்க அதனை பயன்படுத்துகின்றனர்.

மாணவர்கள் இதுபோல சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை பயன்படுத்துவதைக் கண்டறிய சில ஆசிரியர்கள் ஒரு பயனுள்ள வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மாணவர்கள் தாங்களாகவே விடாமுயற்சியுடன் செயல்படுவதன் மூலம் தங்கள் பகுப்பாய்வுத் திறனைக் கொண்டே பணிகளை முடிப்பதை உறுதிசெய்ய விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

Latest Videos

undefined

WhatsAppக்கு இனி மொபைல் நம்பர் தேவையில்லை.. பெயரே போதும்.! முழு விபரம் உள்ளே

ChatGPT தொடங்கப்பட்டதிலிருந்து, பல மாணவர்கள் தங்ளுக்குக் கொடுக்கப்படும் பணிகளை முடிக்க AI உதவியை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். AI இன் சிந்தனையற்ற பயன்பாடானது பகுப்பாய்வுத் திறன்களைத் தடுக்கிறது என்பதால் AI பயன்பாட்டைக் கண்டறிய அதற்கான பிரத்யேக மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

தி ஹெரிடேஜ் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் அனிஷா சென் கூறுகையில், "ஒரு மாணவர் எழுதும் சொற்கள் அல்லது எழுதும் பாணியில் திடீர் மாற்றத்தைக் கண்டறிந்தால், அதனை ஏ.ஐ. டிடெக்டர் மற்றும் எழுத்துத் திருட்டைக் கண்டறியும் மென்பொருள் மூலம் சரிபார்க்கிறோம்" எனக் கூறுகிறார்.

சில ஆசிரியர்கள் மாணவர்களின் தரம் மற்றும் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட கருத்துகளும் சொற்களும் இருந்தால்  அதனைச் சோதித்துப் பார்க்கிறார்கள். "பத்தாம் வகுப்பு மாணவர் தன் வீட்டுப் பாடத்தில், அவர் புவிசார் அரசியல் போன்ற வகுப்பில் கற்பிக்கப்படாத ஏதாவது தலைப்புகளில் எழுதியுள்ளார்" என்று தெற்கு கொல்கத்தா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகிறார். "வகுப்பில் மாணவர்களின் மொழித்திறன் வெளிப்பாடு அவர்கள் சமர்ப்பிக்கும் வீட்டுப்பாடங்களுடன் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடும்போது அதைக் கண்டுபிடிப்பது எளிதாகிறது" என்றும் அவர் சொல்கிறார்.

சூடுபிடிக்கும் ஓடிடி போட்டி! ஐபிஎல் முடிந்தபின் ஜியோ சினிமாவில் இலவசமாக வரப்போவது என்ன?

ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செயல்படும் தானியங்கி சேவை என்பதால், அது பல மாணவர்கள் ஒரே மாதிரியான விடைகளை எழுத வழிவகுக்கிறது. லேடி பிரபோர்ன் கல்லூரி முதல்வர் ஷியுலி சர்க்கார் கூறுகையில், "ChatGPT தகவல்களை மட்டுமே வழங்குகிறது. மாணவர்கள் அதைப் பகுப்பாய்வு செய்து பார்க்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாணவர்கள் எதைப் பற்றி எழுதுகிறோம் என்பதைத் தெரிந்து எழுத வேண்டும்" என்கிறார்.

டிபிஎஸ் நியூ டவுன் கல்வி நிறுவனத்தின் துணை முதல்வர் அம்பிகா மெஹ்ரா கூறுகையில், "குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இந்த கருவிகளின் பயன்பாட்டை நாங்கள் ஊக்குவிப்பதில்லை" என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

வடகொரியாவில் 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள் தண்டனை! வீட்டில் பைபிள் இருந்ததுதான் குற்றமாம்!

click me!