Airtel, Jio, VI எந்த நெட்வொர்க்கில் 5ஜி வேகம் அதிகம்? நம்பர் 1 இடத்தில்…

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 10:54 AM IST

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிமுகத்தின் போது ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகியவற்றின் 5ஜி வேகம் எந்த அளவில் இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் கடந்த அக்டோபர் 1ம் தேதியிலிருந்து 5ஜி சேவை அமலில் உள்ளது. அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது 5ஜி தான் அதி வேகமானது என விளம்பரம் செய்து வருகின்றன. அனைவரும் 5ஜியை பயன்படுத்த மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.  4ஜியினை விட அதிகமான வேகம் 5ஜியில் இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இனி ரூ.10,000க்கு மேல் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக 5ஜி இருக்கனும்.. மத்திய அரசு அட்வைஸ்

Tap to resize

Latest Videos

 இந்த நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா இவற்றில் எது வேகமான  5ஜி நெட்வொர்க் என்பது குறித்து, இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் நடைபெற்ற 5ஜி டெமோ ஆய்வு அறிக்கையின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஜியோ ட்ரூ 5ஜி சேவையின் இணைய வேகம் 2 Gbps வரையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏர்டெலில் 1 Gbps ஆகவும், வோடஃபோன் ஐடியாவில் 550 Mbps ஆகவும் உள்ளது. 

Realme 10+ Pro 5G ஸ்மார்ட்போன் குறித்த அப்டேட்!

ஜியோவில் அதிகமான வேகம் இருப்பதற்கு காரணம், இது ஸ்டேண்டலோன் முறையை பின்பற்றி 5ஜி சேவையை வழங்கியது ஆகும்.  அதாவது 4ஜி யினை சாராமல், பிரத்யேகமாக முழுவதுமாக 5ஜி யினை வடிவமைத்து உள்ளது. அனைத்து நிறுவனங்களும் சி பேண்ட் டெஸ்டிங் முறையை பின்பற்றி உள்ளது.  ஆனாலும் இணைய வேகம்  மாறுபட்டு உள்ளதற்கான  காரணம் இந்த ஸ்டேண்டலோன் மற்றும் நான் ஸ்டேண்டலோன் முறையே ஆகும். 
தற்போதைக்கு 5ஜி சேவையை ஏற்கனவே உள்ள 4ஜி சிம்மில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நாடுமுழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!