Jiomart Bestival Sale ஆரம்பம்.. எக்கச்சக்க பொருட்களுக்கு ஆஃபர் அறிவிப்பு!

By Dinesh TG  |  First Published Oct 14, 2022, 10:02 PM IST

ஜியோ மார்ட்டில் பெஸ்டிவெல் சேல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் எக்கச்சக்கக வீட்டு உபயோகப் பொருட்கள், எலெகட்ரானிக்ஸ் என பலவற்றிற்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


பண்டிகை காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் https://www.jiomart.com/ ஜியோ மார்ட்டில்  Bestival Sale என்ற சிறப்பு தள்ளுபடி ஆஃபர் விற்பனை தொடங்கியுள்ளது. இன்று 14 ஆம் தேதி தொடங்கி, வரும் 24 ஆம் தேதி வரையில் இந்த விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 128ஜிபி வேரியண்ட் ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் விலை 49,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டிவி வகைகள் 5,499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. FM ரேடியோ, சரிகம, ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ கேட்ஜெட்டுகளுக்கு 80 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. லேப்டாப்புகளுக்கு 40 சதவீதம் வரையில் ஆஃபர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

Flipkart இல் தரமற்ற பொருட்களை விற்று நூதன மோசடி செய்வதாக பிரபல யூடியூபர்கள் குற்றச்சாட்டு !!

மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஆயில், விஸ்பர் உள்ளிட்ட தாய் நலம் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள், சமையல் பாத்திரங்கள் கடாய் வகைகள் ஆகியவற்றுக்கு 80 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆடை வகைகள், பலசரக்கு பொருட்கள், திண்பண்ட வகைகள், ஸ்டேஷனரி பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என பலவற்றிற்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. 

அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 15,000 பட்ஜெட்டிற்குள் வாங்க ஆசைப்படுகிறீர்களா ? உங்களுக்கான பட்டியல்

இந்த ஆஃபரில் கூடுதலாக கூப்பன் கோடுகளும் வழங்கப்படுகின்றன. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால், எஸ்பிஐ டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கண்ட ஆஃபர்களை பெறலாம். இந்த ஆஃபர் அக்டோபர் 24 ஆம் தேதி வரையிலும், ஸ்டாக் உள்ள வரையிலும் அமலில் இருக்கும்.

click me!