WhatsApp Update: நீண்ட காலமாக எதிர்பார்த்த அப்டேட் வந்துவிட்டது!

By Dinesh TGFirst Published Oct 15, 2022, 11:07 PM IST
Highlights

நீங்கள் அனுப்பிய மெசேஜை எடிட் செய்து கொள்ளக்கூடிய புத்தம் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப்  சோதனை செய்து வருகிறது.

கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் லிங்க் மூலம் வீடியோ கால் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தின் வாயிலாக சுமார் 32 நபர் வரையில் கான்பரன்ஸ் காலில் கலந்து கொள்ளமுடியும். இந்த அம்சம் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் மற்றொரு அம்சத்தினை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளது.

நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை எடிட் செய்யக்கூடிய  அம்சத்தினை  தற்போது  வாட்ஸ் அப்பிலும் கொண்டுவரவுள்ளது. பீட்டா வெர்சனில் இந்த அப்டேட் தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த ஸ்க்ரீன் ஷாட்டுகள் WAbeta Info இணையதளத்தில் வெளிவந்துள்ளன. 

Google Tricks : தினமும் யூஸ் பண்றோம் ஆனா இது தெரியாம போச்சே ! அட்டகாசமான கூகுள் ட்ரிக்ஸ்

அதன்படி, வாட்ஸ்அப் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்பிய  மெசேஜில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை எடிட் செய்து கொள்ளலாம். ஆனால் இதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. நீங்கள் மெசேஜ் செய்த 15 நிமிடங்களுக்குள் அந்த மெசேஜினை எடிட் செய்தாக வேண்டும்.
இல்லையென்றால் அதனை உங்களால் எடிட் செய்ய இயலாது. சாதாரணமாக டெலீட் மட்டுமே செய்யமுடியும்.

இந்த அப்டேட் எப்படி இருக்கு? Twitter-ல் இனி யாரும் உங்களை டேக் செய்ய முடியாது

மேலும் நீங்கள் மெசேஜை எடிட் செய்தால், அதை எதிர்முனையில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், எடிட்டட் (edited) என தோன்றும். இந்த அம்சத்தை நோக்கி பயனர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், இந்த புதிய அப்டேட்டில் 15 நிமிடங்கள் என இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரது எதிர் பார்ப்பாக உள்ளது. 

click me!