வாட்ஸ்அப் இப்போது ஒரு புதிய அப்டேட்டை உருவாக்கி வருகிறது, இது டெஸ்க்டாப் பீட்டாவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை புகாரளிக்கும் வகையிலான ஆப்ஷனை பயனர்களுக்கு வழங்குகிறது.
வாட்ஸ்அப் செயலியின் சேவை விதிமுறைகளை மீறும் மெசேஜ்களையும், நபர்களையும் புகாரளிப்பதற்கான வழிமுறைகளை WhatsApp ஏற்கனவே கொண்டுள்ளது.அந்த வகையில் தற்போது, டெஸ்க்டாப் பீட்டா தளத்தில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை புகாரளிக்கும் ஆற்றலை பயனர்களுக்கு வழங்கும் அம்சத்தை கொண்டு வருவதற்கான பணியில் இறங்கியுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிரிவில் புதிய மெனுவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக Wabetainfo தளத்தில் வெளியான தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களில் மிகதீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்போது பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் முரணாக இருந்தால் அதை புகாரளிக்கும் அம்சம் கொண்டு வரப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர் ஆபாசமான வீடியோவை ஸ்டேட்டஸாக வைத்திருந்தால், அல்லது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டும் ஏதேனும் வீடியோவை ஸ்டேட்டஸாக வைத்திருநால் வாட்ஸ்அப்பில் புகாரளிக்கலாம். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஸ்டேட்டஸ்களை புகாரளிக்கும் திறன் மேம்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகும் என்று Wabetanifo தளம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டாவின் எதிர்கால அப்டேட்டில் இந்த அம்சம் வெளியிடப்படும். மேலும், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் தளத்தில் DND அம்சத்தை வெளியிடவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.
Twitter Views: யூடியூப்பைப் போலவே டுவிட்டரிலும் இந்த அம்சம் வந்து விட்டது! எலான் மஸ்க் அறிவிப்பு!
WhatsApp செயலியில் வரவுள்ள இந்த DNTஅம்சம் இப்போது Windows இல் WhatsApp கால்களுக்கான நோட்டிபிகேஷன்களை முடக்க உதவும். மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ பீட்டா சேனல் வைத்திருக்கும் சில பீட்டா பயனர்களுக்கு கால் அறிவிப்புகளை முடக்குவதற்கான அம்சம் தற்போது கிடைக்கிறது.
விண்டோஸுக்கான வாட்ஸ்அப் செயலியைப் அப்டேட் செய்த பயனர்கள், செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, நோட்டிபிகேஷன்களை முடக்குவதற்கான வழிகளைப் பெற வாய்ப்புள்ளதாக WhatsApp தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப் கால்களை பெற விரும்பவில்லை என்றால் அவற்றை அமைதிப்படுத்த உதவும்.