200 மெகாபிக்சல் கேமரா கொண்ட Infinix Zero Ultra விற்பனைக்கு வந்தது!

By Dinesh TG  |  First Published Dec 25, 2022, 12:37 PM IST

Infinix Zero Ultra ஆனது இந்தியாவில் டிசம்பர் 20 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.


ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் நிறுவனம் இன்பினிக்ஸ் ஆகும். இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி, இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா என்ற ஸ்மார்ட்போனை ரூ.29,999க்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 25 ஆம் தேதி Flipkart இல் கிடைக்கும். காஸ்லைட் சில்வர் மற்றும் ஜெனிசிஸ் நோயர் ஆகிய வேரியண்டுகளில் வருகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

Tap to resize

Latest Videos

Infinix Zero Ultra 6.8-இன்ச் FHD, 120Hz AMOLED டிஸ்ப்ளே,6nm 5G பிராசசர் ஆகியவை உள்ளன. கேமராவைப் பொறுத்தவரை, 200 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. அத்துடன் 60 மெகாபிக்சல் கேமரா, OIS தொழில்நுட்பத்துடன் வருகிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

OnePlus 11 -க்குப் போட்டியாக களமிறங்கும் iQOO 11

ஸ்மார்ட்ஃபோனில் 4500mAh சக்தி கொண்ட பேட்டரி, 180W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இது 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஆண்ட்ராய்டு 12, 6-நானோமீட்டர் MediaTek Density 920 5G பிராசசர், 5G+WiFi6+Dual Band 5G சிம் உள்ளன. இதில் பன்னிரெண்டு 5G பேண்டுகள் உள்ளன.

click me!