வாட்ஸ்அப்புடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் iMessage சேவையில் பாதுகாப்பே கிடையாது என்று மார்க் சக்கர்பெர்க் விமர்சித்துள்ளார்.
வர்த்தக போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை மறைமுகமாக சாடுவதும், குறைகளை சுட்டிகாட்டுவதும் இயல்பானது. ஆனால், மெட்டா -வாட்ஸ்அப் நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் நேரடியாகவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் சேவையை விமர்சித்துள்ளார்.
நேற்று அக்டோபர் 18 ஆம் தேதி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாட்ஸ்அப் குறித்த விளம்பரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், iMessage-ஐ விட WhatsApp மிகவும் தனிப்பட்டது மற்றும் பாதுகாப்பானது. குரூப் சாட் உட்பட ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் வாட்ஸ்அப் வேலை செய்யும்.
வாட்ஸ்அப்பில் வெறும் ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் எல்லா புதிய சாட்களையும் மறைந்துவிடும்படி அமைத்துக்கொள்ளலாம். மேலும் கடந்த ஆண்டு நாங்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பேக்அப் முறைகளையும் அறிமுகப்படுத்தினோம். இவை அனைத்தும் iMessage இல் இன்னும் இல்லை’ இவ்வாறு மார்க் சக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.
ரூ.9 ஆயிரம் பட்ஜெட்டில் Moto E22S அறிமுகம்!
இதில் கடைசி வரிதான் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் ஐமெசேஜ் சேவையில், பேக்அப் செய்யும் போது அது எண்ட்-டு-எண்ட் பாதுகாப்பு முறையில் செயல்படாது என்பது நிதர்சனம்.
ஆப்பிள் நிறுவனம் பல காலமாக தங்களது தயாரிப்புகள் தான் பாதுகாப்பு நிறைந்தவை என்று முத்திரை குத்தி விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், அவை அனைத்தையும் மார்க் சக்கர்பெர்க் வெறும் ஒரே இன்ஸ்டா பதிவில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
70 இன்ச் பெரிய அளவு திரையுடன் Redmi 4K Smart TV A70 அறிமுகம்!
முன்னதாக வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு இல்லை என்றும், 13 ஆண்டுகளாக உளவு வேலை பார்த்து வருவதாகவும் இன்ஸ்டாகிராம் நிறுவனர் பாவேல் துரோவ் விமர்சித்து இருந்தார். தற்போது அதே போல், ஐமெசேஜில் பாதுகாப்பு இல்லை என்று வாட்ஸ்அப் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் எந்தச் செயலிதான் பாதுகாப்பானது என்பது குறித்து பயனர்களுக்கு குழப்பமாகவே உள்ளது.