JioFiber பிளானில் ரூ.6,500 ஆஃபர்! இன்னும் எக்கச்சக்க சலுகைகள்!!

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 11:48 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் JioFiber திட்டத்தில் எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  ஃபைபர் இன்டர்நெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 6,500 ரூபாய்க்கு மதிப்புள்ள அட்டாசமான ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல், AJIO, இன்னும் பிற சேவைகளில் இந்த 6,500 ரூபாய் மதிப்புள்ள பரிசுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நூறு சதவீதம் ரீஃபண்டு என்ற திட்டத்தின் அடிப்படையில், 4K செட்அப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் இன்று அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரையில் மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய JioFiber இணைப்பைப் பதிவுசெய்து, 6 மாதத்திற்கான ரூ.599  பிாரட்பேண்ட் அல்லது ரூ.899 பிராட்பேண்ட் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, மற்ற பிளான் சலுகைகளுடன் இரண்டு கூடுதல் ஆஃபர்களும் உண்டு. இந்த ஆஃபரில் 100 சதவீதம் "வேல்யூ பேக்" மற்றும் 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ரூ.599 பிளான்:

ரூ. 599 ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை (6 மாத பிளான்) வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, ரூ.4,500 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. அவை: தளத்தில் ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,000க்கான வவுச்சர், NetMedsக்கு ரூ.1,000 வவுச்சர் மற்றும் IXIGO தளத்திற்கு ரூ.1,500 வவுச்சர் என 4 வெவ்வேறு பிராண்டுகளின் வவுச்சர்கள் இதில் உள்ளன. பிளானின் ஒரு பகுதியாக 6 மாத வேலிடிட்டியுடன் கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டியையும் வழங்கப்படுகிறது. இது Jio வழங்கும் 30Mbps பிராட்பேண்ட் திட்டமாகும், இதில் 14+ OTT ஆப்ஸ் மற்றும் 550+ ஆன்-டிமாண்ட் சேனல்கள் கிடைக்கும்.

Vodofone Idea Diwali Offer: ஜியோவுக்கு போட்டியாக ஆஃபர்களை வாரிவழங்கும் Vi

ரூ.899 பிளான்:

இதே போல், ரூ.899 ஜியோஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் (6 மாத திட்டம்) ரூ.6,500 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. அவை: AJIO தளத்திற்கான ரூ.2,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலுக்கான ரூ.1,000 வவுச்சர், NetMedsக்கான ரூ.500 வவுச்சர் மற்றும் IXIGO தளத்திற்கு ரூ.3,000 வவுச்சர் அடங்கும். மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 6 மாத வேலிடிட்டியுடன் கூடுதலாக 15 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. இந்த பிளானின்படி 100Mbps வேகம், 14+ OTT ஆப்ஸ் மற்றும் 550+ ஆன்-டிமாண்ட் சேனல்கள் வழங்கப்படுகின்றன.

click me!