Vodofone Idea Diwali Offer: ஜியோவுக்கு போட்டியாக ஆஃபர்களை வாரிவழங்கும் Vi

By Dinesh TG  |  First Published Oct 18, 2022, 11:33 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் ஆபர்களை குவித்து வருகின்ற சூழலில் வோடோபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆபரை அறிவித்து உள்ளது.
 


தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வோடோபோன் ஐடியா தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக மலிவான விலையில் டேட்டாவை அள்ளி கொடுக்கிறது. இந்தச் சலுகை அக்டோபர்  18 முதல் அக்டோபர்  31  வரை நடைபெற உள்ளது.

இந்த தீபாவளி சலுகையில் மொத்தம் மூன்று திட்டங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவை :

Tap to resize

Latest Videos

1. ரூ.1449 திட்டம்:

இத்திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா, ஆகியவை வழங்கப்படுகின்றன. இது 180 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இத்திட்டத்தில், பயனர்கள் 50 ஜிபி கூடுதல் டேட்டாவை பெறுவார்கள்.

2. ரூ.2899 திட்டம்:

ரூ.1449 திட்டத்தை போலவே இதிலும் 1.5 ஜிபி  தினசரி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 SMS, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ஆகியவற்றை Vi வழங்குகிறது. இந்த திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இதனை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது 75GB போனஸ் டேட்டா கிடைக்கும்.

Flipkart Diwali Sale ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

3. 3099 திட்டம்:

ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய விரும்புவோர் ரூ.3099 திட்டம் மற்றும் ரூ.2899 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.2899 திட்டத்தை போலவே இந்த ரூ.3099 திட்டமும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா,அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. இதைத்தவிர இத்திட்டத்தில் வழக்கமான முறையில் நாள் ஒன்றிற்கு 100 SMS வழங்கப்படுகிறது.

70 இன்ச் பெரிய அளவு திரையுடன் Redmi 4K Smart TV A70 அறிமுகம்!

இத்திட்டத்தில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது. ஒரு வேலை வேறு நிறுவனம் இதை விட குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கினால் ஒரு வருடத்திற்கு நீங்கள் இதை ரத்தும் செய்ய முடியாது, புதிய ஆஃபரை கூடுதல் கட்டணம் கொடுத்து தான் பெற வேண்டியிருக்கும்.

click me!