இனி Instagramஐ இனி ஏமாற்ற முடியாது!

By Dinesh TG  |  First Published Oct 17, 2022, 11:19 PM IST

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஏஜ் வெரிஃபிகேஷன் முறையை இந்தியாவிற்கு விரிவுபடுத்த உள்ளதால் இனி உங்கள் வயதை போலியாகக் காட்ட முடியாது.


நாட்டில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பிறந்த தேதியினை எடிட் செய்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை தடுக்கும் விதமாக மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இன்ஸ்டாகிராமில் தங்களுடைய பிறந்த தேதியை எடிட் செய்ய முயன்றால், அதனை நிரூபிக்க பயனர்கள் தங்களின் அடையாளச்சான்றையோ,அல்லது செல்ஃபி வீடியோவையோ பதிவு செய்ய வேண்டும். இந்த செல்ஃபி வீடியோவை ஆராயும் வகையில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்துகின்றனர். இதைத்தவிர சோஷியல் வவுச்சிங் செய்வதற்கு பயனர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது, சக ஃபாலோவர்கள் குறிப்பிட்ட பயனரின் வயதை உறுதிப்படுத்தும் ஒரு முறையாகும். இதனை உறுதியளிக்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

பொது இடங்களில் சார்ஜ் செய்யும் கவனம்! எங்கும் ஹேக்கர்கள், எதிலும் ஆபத்து!

இந்த வயது சரிபார்ப்பை உறுதிசெய்யும் முறையானது, அமெரிக்காவில் ஜூன் மாதம் சோதனை முறையில் தொடங்கியது, இப்போது அது இந்தியா மற்றும் பிரேசிலுக்கு விரிவடைகிறது என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் இன்ஸ்டாவில் வயதை மாற்றியமைத்து, தேவையில்லாத படங்கள், வீடியோக்கள், மெசேஜ்களை செய்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு முடிவுகட்டும் வகையில் இன்ஸ்டா அதிரடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

இன்ஸ்டாகிராமைப் போலவே மற்ற சமூகவலைதளங்களிலும் வயது சரிபார்ப்பு முறை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

click me!