சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலோனோர் பயன்படுத்துகின்றனர்
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இவை இரண்டுமே பயனீட்டாளர்களை கவரும் வண்ணம் பல சிறப்பு ஆப்ஷன்களை அறிமுகம் செய்து வருகிறது .
தற்போது ட்விட்டர் எழுத்துருக்களின் எல்லையை 140 என்பதில் இருந்து இருமடங்கு அதிகரித்து 280 எழுத்துருக்களாக மாற்றி உள்ளது என்பது குறிபிடத்தக்கது
இதற்கு முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ட்விட்டர் பதிவுகளில் எழுத்துருக்களின் எல்லையை 140 என்பதில் இருந்து இருமடங்கு அதிகரித்து 280 எழுத்துருக்களாக மாற்றியது. ஆனால் ஸ்பானிஷ், போச்சுகீசு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே இந்த 280 எழுத்துக்களை பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் தான் இன்று முதல் 280 எழுத்துருக்களை பயன்படுத்தும் வசதி அனைத்து மொழிகளுக்கும் கிடைக்கத் தொடங்கிவிட்டது என்பது கூடுதல் தகவல்
மேலும் ஒரு சிறிய மாற்றமும் கொண்டு வந்துள்ளது ட்விட்டர்.அதாவது ட்வீட்டை எழுதும் போது அனுமதிக்கப்பட்ட எழுத்துருக்கள் இன்னும் எத்தனை மீதம் உள்ளன என்ற எண்ணிக்கையை பார்க்க முடியும். இப்போது அதற்குப் பதிலாக வட்டமான குறியிட்டு வடிவில் இன்னும் எத்தனை எழுத்துருக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டி காட்டப்பட்டுள்ளது
இந்த வசதியை இன்று முதல் பயன்படுத்த முடியும்..