மளிகை பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் சேவையை ஃபிளிப் கார்ட் நிறுவனம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது.
ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான ஃபிளிப் கார்ட் நிறுவனம் மொபைல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், ஆண்கள், பெண்களுக்கான துணிகளும், வீட்டு உபயோக பொருட்களும் புக் செய்தவுடன் வீடுகளுக்கே கொண்டுவந்து டெலிவரி செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.
ஆனால் வீட்டு சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை மட்டும் டோர் டெலிவரி இல்லாமல் செயல்படுத்தி வந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் நிறுவனத்திடம் கோரிக்கை வந்தன.
அதன்படி தனது மொபைல் ஆப்பில் சூப்பர்-மார்ட் என்ற பிரிவின் கீழ் மளிகைப் பொருட்கள் வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளது.
இதன்படி ரூ. 500 க்கும் மேலான ஆர்டர்களுக்கு வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்களை வழங்குவதாகவும் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான ஆர்டருக்கு இலவச சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுத்த சில வாடிக்கையாளார்களுக்கு தற்போது வழங்கப்படும் இந்த சேவை, விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.