ஜியோவை மெர்சலாக்க வரும் 4ஜி ஸ்மார்ட்போன்! ஏர்டெல்லின் அடுத்த கலக்கலான பிளான் ரெடி!

 |  First Published Oct 31, 2017, 6:43 PM IST
airtel - celkon agreement



தனியார் செல்போன் நிறுவனமான ஏர்டெல், செல்கானுடன் இணைந்து புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏர்டெல் மற்றும் கார்பன் மொபைல் நிறுவனம் இணைந்து கார்பன் A40 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட முன்னர் திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், தென் இந்தியாவில் நல்ல வரவேற்புள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை தீட்டியுள்ளது. ரூ.1,349-க்கு ஸ்மார்ட்போன் விற்க இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.2849 கொடுத்து 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஸ்மார்ட்போனை 18 மாதங்கள் பயன்படுத்தனில் 500 ரூபாயும், 36 மாதங்கள் வரை பயன்படுத்தினால் ஆயிரம் ரூபாயும் ஏர்டெல் வாலெட்டில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கேற்ற வகையில் ஏர்ல் ரிசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஜியோவின் 4ஜி பியூச்சர் போன்று இல்லாமல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து செயலிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மை ஏர்ல், விங்க் மியூசி, ஏர்டெல் டிவி போன்ற ஆப்ஸ் அனைத்தும் டீபால்டாக இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

click me!