மிக பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க செயலிழந்து சில மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது.
undefined
இதனிடையே ஃபேஸ்புக் மூலம் மக்களுக்கு தவறான வழியை காண்பித்து விட்டேன் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது. அத்துடன் ஃபேஸ்புக் போலி கண்க்குகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரை 210 கோடி வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதில் சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
210 கோடி மாதாந்திர பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் முதலீடுகள் சார்ந்த தகவல்களில் அந்நிறுவனம் போலி செய்திகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலிடூ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.