1௦௦ ரூபாய் கொடுக்கும் ஜியோ...! “ஜியோ ப்ரைம்” திட்டத்திற்கான கட்டணம் திரும்ப கொடுக்கிறது ...

 |  First Published Mar 23, 2017, 4:47 PM IST
we can get 100 rs thro jio



1௦௦ ரூபாய் கொடுக்கும் ஜியோ...! “ஜியோ ப்ரைம்” திட்டத்திற்கான கட்டணம் திரும்ப கொடுக்கிறது ...

ஜியோ சலுகை பற்றி அறியாதவர்  யாரும் இருக்க முடியாது . இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன் ஜியோ வழங்கும் இலவச சலுகை முடியும் தருவாயில், ஜியோவின் சேவையை தொடர்ந்து  பயன்படுத்த 99  ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என அறிவிக்கப் பட்டு இருந்தது .

Tap to resize

Latest Videos

அதாவது மார்ச் மாதம் முடிவதற்குள் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தான்  ஜியோ ப்ரைம்  திட்டத்தை  தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள  முடியும். இந்நிலையில்  கேஷ்  பேக்  ஆப்ஷனை  அறிமுகம் செய்துள்ளது ஜியோ.

எப்படி செயல்படுத்துவது ?

ரிலைன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தை இலவசமாக பெற ஜியோ மணி எனும் செயலியை இன்ஸ்டால் செய்து, இதன் மூலம் பெறப்படும் ஒவ்வொரு ரீசார்சிலும் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்க உள்ளது.

உதாரணம் :

அதாவது ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரூ.50 கேஷ்பேக் மற்றும் ரூ.303 மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது  இதற்கும் ரூ.50 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

சரி 1௦௦ ரூபாய் எப்படி பெறப்படுகிறது ?

ஜியோ மணி செயலியின் மூலம், மொத்தத்தில் ரூ.402க்கு(rs 99 +rs 303 ) ரீசார்ஜ் செய்யும் போது ரூ.100 கேஷ்பேக் பெறலாம்.

இவ்வாறு செய்வதால் ஜியோ பிரைம் திட்டத்திற்கு செலுத்தும் ரூ.99, கேஷ்பேக் பெயரில் நமக்கே மீண்டும் கிடைக்கிறது  என்பது  குறிப்பிடத்தக்கது .

 

click me!