டிஜிட்டல் இந்தியா கனவோடு பயணிக்கும் மக்கள் தற்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
அதாவது கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் . அதனை தொடர்ந்து,பேடிஎம் , மொபிவிக் உள்ளிட்ட செயலிகள் பண பரிவர்த்தனை செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப் பட்டு வருகிறது . இந்நிலையில், வாட்ஸ் ஆப் செயலியானது இந்தய மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் புது புது கூடுதல் சிறப்பம்சங்களை வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது .
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை எளிதில் பயன்படுத்தும் விதத்திலும் , தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதால், இந்த செயலியை பயன்படுத்தி , பண பரிவர்த்தனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது .
அதன் படி, மத்திய அரசின் UPI வழிமுறையினை, வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனை வழங்குவது குறித்து, வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது .
undefined
இந்தியாவை பொறுத்தவரை வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2௦௦ மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரு வேளை வாட்ஸ் ஆப், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்தால் மற்ற நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .