
பிரபல சியோமி நிறுவனமானது,ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கென பல மொபைல் போன்ஸ் மற்றும் இதர விலை உயர்ந்த சாதனங்களை மி ஆப்ஸ் மூலம் பிளாஷ் விற்பனை செய்ய உள்ளது .
அதன் படி, ரெட்மி மொபைல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், மி.காம் இணையத்தளத்தில் பல மொபைல்கள் மற்றும் பல சாதனங்கள் பிளாஷ் விற்பனை செய்யப்பட உள்ளது.
அதன் படி, ரூ .1 -க்கு பல சாதனங்கள் விற்க சியோமி திட்டமிட்டுள்ளது.
1 ரூபாயில் பிளாஷ் விற்பனையில் மொபைல் பெறுவது எப்படி ?
முதலில் mi.com என்ற மி ஆப்ஸ் டவுன்லோட் செய்யுங்கள்
வரும் 6 ஆம் தேதி சரியாக காலை 1௦ மணிக்கு மி ஆப்ஸ் பயன்படுத்தி, ரெட்மி நோட்4 பெற முடியும் .
இது தவிர்த்து ரெட்மீ 4ஏ கருவியின் கோல்ட் ரோஸ் மற்றும் ரெட்மீ நோட் 4 கருவிகள் முறையே ரூ.5,999/- மற்றும் ரூ.9,999/-க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 மில்லியனை தாண்டிவிட்டரெட்மி நோட் 4
ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே 1 மில்லியனை தாண்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று, மதியம் 12 மணிக்கு ஆன்லைன் விற்பனைக்கு வர உள்ளது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.