ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டி.டி.எச். சேவைகளை வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் ஜியோ செட்-டாப் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. விரைவில், இன்டர்நெட் அடிப்படையிலான(ஐ.பி.) செட்-டாப்பாக்ஸ் சேவையை தொடங்க உள்ளது.
இதற்கு முன் வட்ட வடிவ செட்-டாப் பாக்ஸ், ரிமோட் போன்றவை இருப்பது போல் இருந்தன. ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் செட்-டாப் பாக்ஸ் சதுர வடிவத்தில், கருப்பு நிறம் கொண்டுள்ளது.
வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ் டிஷ் அல்லது ஜியோ பைபர் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ பைபர் திட்டம் மூலம் நொடிக்கு 1 ஜி.பி. என்ற வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த செட்-டாப் பாக்ஸ் சோதனை ஓட்டமாக மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதால், விற்பனைக்கு இல்லை என்று அந்த பாக்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில் ஜியோ செட்-டாப் பாக்ஸ் சாதனத்தில் பல்வேறு போர்ட்கள் இடம்பெற்றுள்ளன. செட்-டாப் பாக்சில் கேபிள் இணைக்கும் போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. போர்ட், ஆடியோ, வீடியோ போர்ட், மற்றும் இன்டர்நெட்இணைப்புக்கான போர்ட் ஆகியவையும் இருக்கின்றன.
ஜியோ செட்-டாப் பாக்ஸ்-இல் வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் கேபிளை நேரடியாக பொருத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது. இதன் மூலம் அதிவேக இணைய வசதியை பெற முடியும். இத்துடன் இதில் காணப்படும் மைக் பட்டன் இதில் வாய்ஸ் ரெக்கனேஷன் வசதிகள் வழங்கப்படலாம்.
ஜியோ செட்-டாப் பாக்சில் புதிய அம்சமாக ‘கேட்ச் அப்’ என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட சேனலின் நிகழ்ச்சிகளை ஒரு வாரத்துக்கு நாம் பதிவு செய்து வைத்து பார்க்க முடியும்.
முதல்கட்டமாக ஜியோ செட்-டாப் பாக்சில் 300 சேனல்களும், அதன்பின், கூடுதலாக சேனல்களும்கொண்டு வரப்பட உள்ளன.
ஜியோ செட்-டாப் பாக்ஸ் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே சமயத்தில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவையும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.