விவோ பிரியர்களே.. உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 2:40 PM IST

Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி 31, 2023 அன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.


ஸ்டைலீஷான, மெல்லியதான ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் முன்னனி நிறுவனமாக விவோ இருந்து வருகிறது. தற்போது விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில், அதன் அறிமுக தேதி விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, வரும் ஜனவரி மாதம் இறுதியில் விவோ எக்ஸ் 90 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

விவோ நிறுவனம் சமீபத்தில் சீனாவில் Vivo X90 குறித்த படங்களை லீக் செய்தது. இப்போது சர்வதேச அளவில் அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்தத் சீரிஸில் வழக்கமான ஸ்மார்ட்போன், ப்ரோ மற்றும் ப்ரோ+ என மூன்று மாடல்கள் உள்ளன. Vivo அனைத்து மாடல்களையும் எல்லா நாடுகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் விவோ எக்ஸ் 90 அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை, இருப்பினும்,பழைய பதிப்பையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு Vivo X90 ஜனவரியில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo X90 இன் விலை சீரிஸ் சீனாவில் RMB 3,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.42,400) இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சீன மாடல்களைப் போலவே இந்தியாவில் வரும் விவோ எக்ஸ் 90 ஸ்மார்ட்போனும் இருக்கலாம். வரவிருக்கும் மூன்று ஸ்மார்ட்போன்களில், விவோ எக்ஸ்90 ப்ரோ+ என்பது அதிக சிறப்பம்சங்கள் கூடிய விலையுயர்ந்த வேரியண்ட் ஆகும். அதில் Qualcomm இன் சமீபத்திய பிராசசரான Snapdragon 8 Gen 2 SoC இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Samsung இன் புதிய Galaxy M04 ஸ்மார்ட்போன்  டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, MediaTek Helio P35 பிராசசர் மற்றும் விரிவாக்கக்கூடிய ரேம் ஆப்ஷன் வழங்குகிறது.

ஒரு பெரிய 6.78-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், QHD+ துல்லியம், டால்பி விஷன், HDR10+ மற்றும் DC டிம்மிங்கிற்கான வசதி ஆகியவை இருக்கலாம்.  4,700mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமராவைப் பொறுத்தவரையில், போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.  விவோ எக்ஸ் 90 சீரிஸின் அனைத்து ஃபோன்களும் நீர் பாதுகாப்பு, தூசி பாதுகாப்பு அம்சங்களோடு. Android 13 OS இருக்கலாம், வழக்கமான பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. 

Vivo X90 ஸ்மார்ட்போனில் HDR10+ உடன் 6.78-இன்ச் AMOLED 120Hz டிஸ்ப்ளே, 300Hz டச் சாம்பிளிங், மீடியாடெக் டிமன்சிட்டி 9200 பிராசசர், 120W வயர்டு சார்ஃர், 4,810mAh பேட்டரி சக்தி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், Hi-Res ஆடியோவுக்கான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. OIS மற்றும் EIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கலாம்.

click me!