டுவிட்டர் நிறுவனத்தில் கடந்த நவம்பர் தொடக்கத்தில் பெரும் பணி நீக்கம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் தேவையில்லாத இன்ஜினியர்களை வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, உலகளாவிய அளவில் பணியாளர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகும், எலோன் மஸ்க்கிற்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு யோசனை செய்து கொண்டிருக்கிறார். இதனால், ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக் இன்னமும் தலைக்கு மேல் கத்தி தான் தொங்கிக்கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை, ட்விட்டர் அதன் உள்கட்டமைப்பு பிரிவில் இருந்து பொறியாளர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், வேலையை இழந்த பல பொறியாளர்களுக்கு, டுவிட்டரில் உங்கள் பங்கு இனி தேவைப்படாது என்று மின்னஞ்சலைப் பெற்றனர்.
இதுகுறித்து தி இன்ஃபர்மேஷன் தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ட்விட்டரின் உள்கட்டமைப்பு அமைப்பில் உள்ள பல ட்விட்டர் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வந்தது. அதில், ட்விட்டர் தரப்பில் அதன் பணியாளர்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இனி தேவையில்லாத பொறுப்பில் உள்ளவர்களை குறைப்பதாகவும் கூறப்பட்டது. முன்னதாக, ஏற்கெனவே எலோன் மஸ்க், ட்விட்டரின் உள்கட்டமைப்புத் தலைவரான நெல்சன் ஆப்ராம்சனையும், பிற மூத்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் தலைவரும், தகவல் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவருமான ஆலன் ரோசாவை நீக்கினார்.
பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?
சமீபத்திய பணிநீக்க நடவடிக்கை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது, எலான் மஸ்க் டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, டுவிட்டர் பணியாளர்களை கிட்டத்தட்ட 75 சதவீதமாக குறைத்துள்ளார். இதற்கு முன்பு டுவிட்டரில் சிஇஓ பராக் அகர்வாலையும் சேர்த்து மொத்தம் 7,500 பணியாளர்கள் இருந்ததனர். தற்போது 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். மேலும், "கடின உழைப்பு" என்ற கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினார், அதாவது ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், அதுவும் கடுமையாக பணியாற்ற வேண்டும்.
எலான் மஸ்க்கின் இந்த கடும் நடவடிக்கைக்கு எதிராக சுமார் 1,200 ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்தனர். இதனால் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில், ட்விட்டர் பொறியாளர் குழுவினர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு குழுக்களில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.