பல முயற்சிகளுக்குப் பிறகு, எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டர் ப்ளூ சந்தாவை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இது நீல நிற டிக் உள்ளிட்ட பல புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. இதை பெறுவதற்கு 999 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். 999 ரூபாய் அளவுக்கு இது தேவைதானா என்பது குறித்து பயனர்களின் கருத்துக்களை இங்குக் காணலாம்.
இதற்கு முன்பு ட்விட்டர் தலைவராக ஜாக் டோர்சி இருந்தபோது, ப்ளூ டிக் சரிபார்ப்பு செயல்முறை வித்தியாசமாகவும் எளிமையாகவும் இருந்தது. மேலும் பயனர்கள் குறைந்தபட்சம் தங்கள் பெயருக்கு அடுத்ததாக நீல நிற டிக் பெற என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்தது. ஒருவர் கூடுதல் விவரங்களுடன் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது, மேலும் ப்ளூ டிக் குறியீடு வழங்குவதற்காகவே அர்ப்பணிப்புள்ள ட்விட்டர் குழு, பயனரின் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே ஒருவர் ப்ளூ டிக் பெறுவார்.
தற்போது புதிய ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். ஒருவர் புளூ டிக் பெறும் முறையை மாற்றுகிறார். அதன்படி, ப்ளூ டிக் வேண்டுமானால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுவரை, ட்விட்டரில் சரிபார்க்கப்படுவது இலவசம். ஆனால், இனி அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
எலான் மஸ்க்கின் சந்தா அடிப்படையிலான ப்ளூ டிக் வழங்கும் திட்டத்தின் பல முயற்சிகள் தோல்வியடைந்த. அதன் பிறகு, மஸ்க் இறுதியாக தற்போது ப்ளூ சந்தாவை பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தினார், இது நீல நிற டிக் குறியீடு உட்பட பல புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. எனவே, அனைத்து ப்ளூ பயனர்களும் நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெற தகுதியுடையவர்கள் என்று அர்த்தமா? ஆம், அப்படிதான். ஆனால் ப்ளூ பயனர்கள் தங்கள் பெயருக்கு அடுத்த டிக் பெறுவதற்கு சில அடிப்படை சோதனை முறைகளையும் கடந்து வரவேண்டும். அந்த சோதனை முறைகளையும் Twitter
பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில:
-- காட்சிப் பெயர் மற்றும் சுயவிவரப் புகைப்படம் இருக்க வேண்டும்
--ஒருவர் Twitter Blue திட்டத்தில் சேர, அவருடைய கணக்கு கடந்த 30 நாட்களில் செயலில் இருக்க வேண்டும்
-- சந்தாவுடன் இருக்கும் கணக்கு 90 நாட்களுக்கு மேல் செயலில் இருக்க வேண்டும்
-- கணக்கில் உறுதிப்படுத்தப்பட்ட தொலைபேசி எண் இருக்க வேண்டும்
-- சுயவிவரப் புகைப்படம், காட்சிப் பெயர் அல்லது பயனர்பெயரில் சமீபத்திய மாற்றங்கள் எதுவும் இருக்கக்கூடாது.
-- கணக்கில் தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது ஏமாற்றும் வகையில் எதுவும் இருக்கக்கூடாது
-- ஆள் மாறாட்டம், ஸ்பேமில் ஈடுபடும் வகையிலும் எதுவும் இருக்கக்கூடாது.
பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?
ட்விட்டர் ப்ளூ சந்தாவுடன், மற்றொரு மாற்றமும் உள்ளது: சரிபார்க்கப்பட்ட பேட்ஜை இலவசமாக விரும்பும் அனைவருக்கும் சரிபார்ப்பு செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. உலகளவில், ஆண்ட்ராய்டுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தா 8 அமெரிக்க டாலர் கட்டணத்தில் கிடைக்கிறது, அதே சமயம் iPhone பயனர்கள் 11 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.
இந்தியாவில், ட்விட்டர் ஐபோன் சந்தாவிற்கு ப்ளூவின் விலை ரூ.999 (ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது), ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. உண்மையில், இது இன்னும் Android தளத்தில் வரவில்லை. நீங்கள் ஐபோன் அல்லது பிரவுசர் மூலமாக மட்டுமே பெற முடியும்.
தற்போது, ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனர்கள் அதை மஸ்க் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து வைத்திருப்பார்கள். பெரும்பாலான "பல ஆண்டுகளாக" புளூ டிக் வைத்திருப்பவர்கள், வரும் மாதங்களில் அந்தக் குறியீடை இழப்பார்கள் என்று எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்தார்.
மஸ்க்கின் புதிய விதிகளின்படி, ப்ளூ டிக் குறியீடை தக்கவைக்க விரும்பினால், ஐபோன் பயனர்கள் மாதத்திற்கு சுமார் ரூ.999 செலுத்த வேண்டும். ஆனால் ஒரு ப்ளூ டிக்கிற்கு இவ்வளவு பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.
உலகெங்கிலும் உள்ள சமீபத்திய அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்வதைத் தவிர, ட்விட்டரில் ப்ளூ டிக்கால், அதுவும் 1000 ரூபாய் செலுத்துவதால் என்ன பலன் இருக்கப் போகிறது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை. இப்போது, ப்ளூ சந்தா இல்லாமல் கூட இதே அப்டேட்களை பெற முடியும். நீங்கள் இலவசமாகப் பெறக்கூடிய ஒன்றை ஏன் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும் என்று பயனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மெம்பர்ஷிப்பை வாங்குவதற்கு அதிகமான பயனர்களை ஈர்க்க, ட்வீட்கள், தீம்கள், பிரத்யேக ஆப்ஸ் ஐகான்கள், புக்மார்க் கோப்புறைகள், இன்னும் சில பிரீமியம் அம்சங்கள் டுவிட்டர் ப்ளூ சந்தாவில் கிடைக்கிறது. ஆனால், அடிப்படைப் பயனருக்கு அவ்வளவு சுவாரஸ்யமாகவோ அல்லது பயனுள்ளதாகவோ இல்லை. மாதத்திற்கு ரூ. 999 மதிப்புடையவை அல்ல.
அமேசான் பிரைமில் ஆண்டுக்கு 1499 ரூபாய் தான் கட்டணம். ஆனால், அதில் இலவச டெலிவரி, இலவச ஆடியோ மற்றும் வீடியோ என பலதரப்பட்ட வசதிகள் உள்ளன. அதே சமயத்தில் டுவிட்டரில் மாதம் 1000 ரூபாய் செலுத்துவதால் அடிப்படை பயனருக்கு, உருப்படியான வசதிகள் ஏதாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால், சொல்லுகிற அளவுக்கு எதுவும் இல்லை என்பது தான் முடிவாக அமைகிறது.