சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்கள் ஆஃபரில் உள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.
சாம்சங் நிறுவனத்தின் சார்பில் Big Holiday Sale Deals என்ற பெயரில் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திற்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எஸ்பிஐ வங்கி கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் உண்டு. வேறு ஏதேனும் பொருட்களை அப்கிரேடு செய்ய வேண்டும் என்றால், அல்லது ஈஎம்ஐ மூலமாக பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கான வசதிகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ஆஃபர் உள்ளன. Galaxy S22 ஸ்மார்ட்போனின் விலை 52,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி ஆஃபர்கள் எல்லாவற்றையும் சேர்க்கும் போது, 50,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் போது காம்போ ஆஃபரும் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த சாம்சங் எம்04 ஸ்மார்ட்போனும் ஆஃபர் பட்டியலில் உள்ளது. 9,499 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது 8,499 ரூபாய்க்கு ஆஃபரில் வழங்கப்படுகிறது. Samsung Galaxy M04 ஆனது 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பேனல் HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது மற்றும் அதில் செல்ஃபி கேமரா, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா, பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் கூடுதல் கேமரா உள்ளன.
மற்றபடி, வழக்கம் போல் 15W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000mAh பேட்டரி, 4ஜி, VoLTE, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக, ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதிகள் உள்ளன.இதே போல் டிவி, இயர் பட்ஸ், டாப் லோடிங் வாஷிங் மெஷின், பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு நல்ல சலுகைகள் உள்ளன.
இந்த ஆஃபர்கள் அனைத்தும் சாம்சங்கின் இணையதளத்தில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே, சாம்சங் தயாரிப்புகளை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் https://www.samsung.com/in/offer/online/samsung-fest/ என்ற சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஆஃபர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி வரையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.