வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு Moto G53 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Dinesh TG  |  First Published Dec 19, 2022, 10:11 AM IST

மோட்டோரோலா நிறுவனம் மலிவான விலையில் மோட்டோ ஜி53 என்ற 5ஜி ஸ்மார்ட்போனை என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவுக்கு எப்போது வரும், இந்திய மதிப்பில் இதன் விலை என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம். 


குறைந்த விலையில், நிறைந்த தரமான அம்சங்களை வழங்குவதில் மோட்டோ நிறுவனம் முன்னனி இடத்தில் இருந்து வருகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களில் எல்லாம் குறிப்பிட்ட சில 5ஜி பேண்டுகள் மட்டுமே இருக்கும். ஆனால், மோட்டோ ஸ்மார்ட்போனில் வழக்கத்தை விட சற்று அதிகமான 5ஜி பேண்டுகள் இருக்கும். 

இந்த நிலையில், மோட்டோ நிறுவனம் பட்ஜெட் விலையில், அதுவும் 10 ஆயிரம் ரூபாய்க்கு புத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் பெயர் மோட்டோ ஜி53 ஆகும். இது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையை வந்தடையலாம். Moto G52 4Gக்குப் பிறகு வந்தாலும், Moto G53 ஆனது மிகவும் எளிமையான அம்சங்களைக் கொண்டுள்ளது, 

Latest Videos

undefined

இது G52 இல் POLED டிஸ்ப்ளேவிற்கு பதிலாக LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. செல்ஃபி கேமரா 8 மெகாபிக்சல் (16 மெகாபிக்சலுக்கும் குறைவாக) தரமிறக்கப்பட்டது. Motorola X40 ஸ்மாரட்போனில் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட் பிராசசருடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

Moto G53 5G விலை

Moto G53 5G ஆனது அடிப்படை 4GB RAM மற்றும் 128GB மாடலுக்கு CNY 900 (தோராயமாக ரூ. 10,700) ஆரம்ப விலையைக் கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனும் உள்ளது. அதன் விலை CNY 1099 (சுமார் ரூ. 13,000) ஆகும். இதற்கு மாறாக, மோட்டோரோலாவின் 4ஜி ஸ்மார்ட்போனான Moto G52 இந்தியாவில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Samsung இன் புதிய Galaxy M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 முதல் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, MediaTek Helio P35 பிராசசர் மற்றும் விரிவாக்கக்கூடிய ரேம் ஆப்ஷன் வழங்குகிறது.

Moto G53 5G சிறப்பம்சங்கள்:

புதிய Moto G53 5G ஸ்மார்ட்போனானது பட்ஜெட் பிரிவில் 5G அம்சம் கொண்டு வரவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 5G மெதுவாக வெவ்வேறு இடங்களில் இலவசமாக (தற்போதைக்கு) வருவதால், இந்தியாவில் நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில்  6.5 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி திரை, HD+ ரெமொல்யூசன் மட்டுமே உள்ளது. அதாவது 720 x 1600 பிக்சல்கள் உள்ளன. குவால்காம் ஆக்டாகோர் பிராசசர், 8GB RAM மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. Moto G53 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளன.

மற்றபடி, வழக்கம் போல் 3.5 மிமீ ஜாக், புளூடூத், வைஃபை, என்எப்சி மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆகியவை உள்ளன. 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 

click me!