ஸ்விக்கி மூலம் ரூ.16 லட்சத்திற்கு மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தவர்!

By Dinesh TGFirst Published Dec 19, 2022, 9:25 AM IST
Highlights

பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் இருந்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவற்றின் விவரங்களை Swiggy நிறுவனம்  பகிர்ந்துள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி ஆகும். சுவாரஸ்யமாக, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது

உணவின் மீதுள்ள அன்பை விட மேலான அன்பு வேறெதுவும் இல்லை என்பதை ஸ்விகியின் இந்த அறிக்கை காட்டுகிறது. ஸ்விகியின் அறிக்கையின்படி, பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தீபாவளியின் போது ரூ.75,378க்கு ஒரு ஆர்டரைச் செய்தார், புனேவைச் சேர்ந்த மற்றொரு நபர் 71,229 ரூபாய்க்கு பர்கர்கள் மற்றும் ஃப்ரைடு உணவு வகைகளை தனது குழுவினருக்கு ஆர்டர் செய்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ரூ.16 லட்சத்திற்கு மளிகைப் பொருட்களை ஒருவர் ஆர்டர் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளமானது விரைவான டெலிவரி வழங்குவதால், வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல  வேண்டிய அவசியமே இல்லை என்றளவுக்கு ஸ்விகி தளம் செயல்படுகிறது. மளிகைப் பொருட்களுக்கு ரூ. 16 லட்சத்தை செலவழித்தவருக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். 

மார்வெல் பிரியர்களே… உங்களுக்காகவே OnePlus நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இன்னொருவர் அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் கடையே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 50 மீட்டர் தொலைவில் உள்ள கடையில் ஸ்விகி மூலம் ஆர்டர் செய்துள்ளார். அதற்கும், ஸ்விகி தரப்பில் டெலிவரி செய்துள்ளனர். 1.03 நிமிடங்களில் இந்த டெலிவரி நடைபெற்றதால், விரைவான ஆர்டர் பட்டியலில் இதையும் Swiggy சேர்த்துள்ளது.  Swiggy Instamart இலிருந்து ஏராளமான மக்கள் நூடுல்ஸ் மற்றும் பால் போன்றவற்றை ஆர்டர் செய்துள்ளனர் என்று ஸ்விகி தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் முழுமையான பட்டியலையும் Swiggy பகிர்ந்துள்ளது. சிக்கன் பிரியாணியை எவ்வளவு விரும்புகிறோம் என்பதைக் காட்டும் வகையில், இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. பிரியாணிக்கு அடுத்தபடியாக மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகியவை உள்ளன.
 

click me!