பயனர்கள் தங்கள் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுக்க உதவும் புதிய அம்சத்தை Instagram இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அந்த கணக்கை மீட்டெடுக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை இப்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து பிரவுசரில் Instagram.com/hacked என தட்டச்சு செய்யலாம்.
அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தொகுப்புகளைப் பின்பற்றினால் போதும். உங்கள் கணக்கை மீட்டெடுக்கலாம். பொதுவாக மக்கள் தங்கள் இன்ஸ்டாகிராமை ஒபன் செய்ய முடியாத போது பீதி அடைகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, இன்ஸ்டாகிராம் பயனர்கள் பிரவுசரில் இருந்து நேரடியாக சிக்கலைத் தீர்க்க உதவுகிறது.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் ஒரு வலைப்பதிவில் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பயனர்கள் தங்கள் கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற உதவும் வகையில், அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு நண்பர்களிடம் கேட்கும்படியான ஒரு அம்சத்தை அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “அணுகல் சிக்கல்களை எதிர்கொள்ளும் அல்லது ஹேக் செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுக்கும் வகையில், Instagram.com/hacked என்ற தளத்தை உருவாக்கியுள்ளோம். இது ஒரு புதிய, நம்பிக்கைத்தன்மை வாய்ந்த வசதியாகும்.
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்! வந்துவிட்டது AI chatbot, ChatGPT!
கணக்கு அணுகல் சிக்கல்களைப் புகாரளிப்பதற்கும் அதைத் தீர்ப்பதற்கும் நீங்கள் நம்பலாம். உங்களால் உள்நுழைய முடியவில்லை என்றால், உங்கள் கணக்கு, உங்கள் மொபைல் போன் அல்லது டெஸ்க்டாப் உலாவியில் Instagram.com/hacked ஐ உள்ளிடவும்” இவ்வாறு Instagram தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஹேக் செய்யப்பட்ட கணக்கை திரும்பப் பெறும் முறை:
— உங்களால் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்த முடியாவிட்டால், உங்கள் மொபைல் போன் அல்லது டெஸ்க்டாப் பிரவுசரில் Instagram.com/hacked என்று எண்டர் செய்யவும்
— அதில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். நீங்கள் ஹேக் செய்யப்பட்டதாக நினைத்தால், உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா, இரு காரணி அங்கீகாரத்திற்கான அணுகலை இழந்துவிட்டீர்களா அல்லது உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
— உலாவியில் உங்கள் சிக்கலைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற உதவும் தொடர்ச்சியான படிகளைப் பின்பற்றலாம்.
உங்கள் கணக்கைத் திரும்பப் பெறுவதற்கான மற்றொரு வழி, நண்பர்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகும். உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து உங்கள் கணக்கிற்குத் திரும்புவதற்கு உங்கள் Instagram நண்பர்களில் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுத்ததும், Instagram அவர்களுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பும், உங்கள் நண்பர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினால், நீங்கள் புதிய கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். அவர்கள் Instagram கோரிக்கைக்கு பதிலளிக்கத் தவறினால், நீங்கள் மீண்டும் இரண்டு நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.