இந்தியாவில் நோக்கியா C31 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 10 ஆயிரம் ரூபாய்க்கு வெரார்த்தா?

By Dinesh TG  |  First Published Dec 17, 2022, 9:13 AM IST

இந்தியாவில் நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை, அதற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் உள்ளதா என்பது குறித்து இங்குக் காணலாம். 


நோக்கியாவின் புத்தம் புதிய சி31 ஸ்மார்ட்போனானது 9999 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6.7 இன்ச் HD டிஸ்ப்ளே, IP52-ரேட்டட் பாடி மற்றும் டிரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன.  இதிலுள்ள கேமராவில் கூகுள் தொழில்நுட்பம் உட்பொதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பகல் அல்லது இரவு காட்சிகளை சிறந்த முறையில் போட்டோ எடுக்க முடியும் என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது. 

போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களும், முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமராவும் உள்ளன. கிளீன் ஆண்ட்ராய்டு UI மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இருப்பதால், விளம்பரங்கள் தொல்லை இருக்காது. எளிதாக வீடியோ எடிட்டிங் செய்வதற்கான GoPro இன் Quik செயலி போனில் ஏற்கெனவே இன்ஸ்ட்டால் செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இந்தியாவில் நோக்கியா சி31 விலை

Nokia C31 ஸ்மார்ட்போனானது நோக்கியாின் இ-ஸ்டோர் மற்றும் குறிப்பிட்ட ஆஃபலைன் கடைகளிலும் கிடைக்கிறது. 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்  ரூ.9,999க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,999க்கும் கிடைக்கிறது. கரிக்கட்டை கரி, புதினா மற்றும் சியான் நிறங்களில் வந்துள்ளன. நோக்கியா இந்தியா இணையதளம் எந்தவிதமான ஆஃபர்களையும் குறிப்பிடவில்லை.

நோக்கியா சி31 சிறப்பம்சங்கள்:

நோக்கியா C31 ஆனது 6.7-இன்ச் HD ரெசோல்யூசன், செல்ஃபி கேமராவிற்கான பழமையான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. திரையில் தடிமனான பெசல்களும் உள்ளன, இது இந்த வரம்பில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் பொதுவானது ஆகும். 

64GB வரையிலான மெமரி, 4GB RAM, ஆக்டோகோர் பிராசசர் உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. GoPro Quik மற்றும் Spotify போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் உள்ளன. இரண்டு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று HMD நிறுவனம் உறுதியளிக்கிறது.

இதன் பின்புறத்தில் உள்ள டிரிபிள் கேமரா அமைப்பில் AF உடன் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார், போர்ட்ரெய்ட், மேக்ரோ போட்டோகிராபிக்கான 2 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

10W சார்ஜிங் ஏறக்கூடிய 5050mAh பேட்டரி, 256GB வரை மைக்ரோSD கார்டு வசதி, கைரேகை ஸ்கேனர், புளூடூத் 4.2 மற்றும் Wi-Fi 802.11 b/g/n ஆகியவை உள்ளன. ஸ்மார்ட்போனில் 3.5 மிமீ ஹெட்ஃபோன்கள் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவை வழக்கம் போல் உள்ளன.

click me!