Netflix வயர்லெஸ் இயர்பட்ஸ், ஹெட்ஃபோன்களை அறிமுகம்!

Published : Dec 17, 2022, 12:06 AM IST
Netflix வயர்லெஸ் இயர்பட்ஸ், ஹெட்ஃபோன்களை அறிமுகம்!

சுருக்கம்

Netflix நிறுவனம் boAt உடன் இணைந்து வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS), ஹெட்ஃபோன்கள் மற்றும் வயர்லெஸ் நெக்பேண்ட் என பல்வேறு ஆடியோ கேட்ஜெட்களை அறிமுகப்படுத்துகிறது.

பிரபல ஓடிபி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது Boat ஆடியோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. நாய்ஸ் கேன்சல் வசதியுடன் கூடிய, ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS), ஹெட்ஃபோன்கள் மற்றும் வயர்லெஸ் நெக்பேண்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது. இந்த நெட்ஃபிக்ஸ் பிராண்டட் தயாரிப்புகள் அனைத்தும் டிசம்பர் 20 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

boAt X Netflix ஸ்ட்ரீம் பதிப்பில் மூன்று கேட்ஜெட்டுகள் உள்ளன. அவை:  boAt Nirvana 751ANC, Airdopes 411ANC மற்றும் Rockerz 333 Pro ஆகும். இந்த ஆடியோ தயாரிப்புகள் தற்போது ப்ரீ புக்கிங் ஆர்டர் செய்துகொள்ளலாம். இதன் விற்பனை டிசம்பர் 20, மதியம் 12 மணி முதல் தொடங்கும், வாடிக்கையாளர்கள் அப்போது நேரடியாக ஆர்டர் செய்துகொள்ளலாம்.

boAt X Netflix Stream Edition வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் boAt இணையதளம், Amazon, Flipkart மற்றும் Myntra உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களுக்குச் சென்று ஆர்டர் செய்யலாம். இரு நிறுவனங்களும் தொடக்கத்தில் வாங்கும் பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. எனவே, boAt X Netflix Stream Edition தயாரிப்புகளை ஆரம்பத்தில் வாங்குபவர்கள் boAt மற்றும் Netflix இலிருந்து அற்புதமான பொருட்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

சிறப்பம்சங்கள்: 

boAt Nirvana 751ANC: இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் 40mm டிரைவருடன், நாய்ஸ் கேன்சல் (33 dB வரை) வசதியுடன் வருகின்றன. ஹெட்ஃபோன்கள் 65 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குகின்றன மற்றும் இதன் விலை ரூ.3,999 ஆகும்.

boAt Airdopes 411ANC: இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்கள் ANCயை (25 dB வரை) ஆதரிக்கின்றன மற்றும் 10mm டிரைவர்களை கொண்டுள்ளன. தெளிவான அழைப்புகள், சைகைக் கட்டுப்பாடுகள் மற்றும் 17.5 மணிநேரம் வரை பிளே பேக் நேரத்திற்கான ENx தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. BoAt Airdopes 411ANC இயர்பட்களின் விலை ரூ.2,999.

ராக்கர்ஸ் 333 ப்ரோ: இந்த நெக்பேண்ட் 10mm டிரைவர்கள் மற்றும் ENx தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது 60 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது மற்றும் 20 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை ஆதரிக்கிறது. இதன் விலை ரூ.1,699.
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!