Xiaomi 12 Pro, Redmi K50i ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 8,000 வரை தள்ளுபடி!

By Dinesh TG  |  First Published Dec 16, 2022, 11:48 PM IST

ஷாவ்மி 12 ப்ரோ, ரெட்மி K50i ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரையில் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆஃபர் விலை மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


ஷாவ்மி நிறுவனம் "நம்பர் 1 Mi ஃபேன் ஃபெஸ்டிவல்" என்ற பெயரில் ஆண்டு இறுதி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு பெரிய தள்ளுபடி உள்ளன. இந்த விற்பனை டிசம்பர் 21 வரை தொடரும். 

பல ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்கள் உள்ளன. அதில் குறிப்பாக Snapdragon 8 Gen 1 பிராசசரில் இயங்கும் Xiaomi 12 Pro, மற்றும் Redmi K50i  ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8,000 வரை தள்ளுபடியைப் பெறுகின்றன. Xiaomi இந்தியாவின் Mi ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபர்களைப் பெறலாம். இதில் வங்கி கார்டுகளுக்கான ஆஃபர்களும் உண்டு. இது தவிர ஸ்மார்ட் டிவிகள் மற்றும் துணைப் பொருட்களுக்கும் ஆஃபர்கள் உள்ளது. "புதுப்பிக்கப்பட்ட டிசைன்கள், அம்சங்கள்" ஆகியவற்றுடன் Mi ஸ்டோர் செயலியையும் புதுப்பிப்பிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

Xiaomi 12 Pro விலை, ஆஃபர் விவரங்கள்:

நீங்கள் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், Xiaomi 12 Pro ஒரு சிறந்த தேர்வாகும். 8ஜிபி ரேம் வேரியண்ட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.55,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதே சமயம் 12ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.59,999க்கு விற்கப்படுகிறது. இரண்டு பதிப்புகளும் 256GB மெமரியுடன் வருகின்றன. 

மார்வெல் பிரியர்களே… உங்களுக்காகவே OnePlus நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக 8,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்க்படுகிறது. எனவே, இதன் விலைகள் முறையே ரூ.47,999 மற்றும் ரூ.51,999 ஆகக் குறைகிறது.Xiaomi நிறுவனம் ரூ. 7,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது.  ஷாவ்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சலுடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இது 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குகிறது. 

Redmi K50i விலை, ஆஃபர், சிறப்பம்சங்கள்:

மறுபுறம், Redmi K50i ஸ்மார்ட்போனானது டிமன்சிட்டி 8100 SoC பிராசசர் மூலம் இயக்கப்படும் ஒரு நல்ல மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 144Hz டிஸ்ப்ளே, 5G, UFS 3.1 சேமிப்பு, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்கள் மற்றும் டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் ஆகியவை உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி K50i ஸ்மார்ட்போன் ரூ.23,999க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.26,999க்கும் கிடைக்கிறது. HDFC அல்லது SBI கார்டுகள் மூலம் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். எனவே,  இதன் விலை முறையே ரூ.20,999 மற்றும் ரூ.23,999 ஆகக் குறைக்கப்படுகிறது.
 

click me!