குறைந்த விலையில் iPhone 13! Flipkart Big Saving Days சிறப்பு விற்பனை!!

Published : Dec 15, 2022, 10:36 PM IST
குறைந்த விலையில் iPhone 13! Flipkart Big Saving Days சிறப்பு விற்பனை!!

சுருக்கம்

Flipkart பிக் சேவிங் டே சேல் விற்பனையில், ஐபோன் 13 மற்றும் ஐபோன்14-க்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் வாங்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் தற்போது பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது.பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை தற்போது நேரலையில் உள்ளது, மற்ற அனைவருக்கும் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 21 வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் போது, பல ​​பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல ஆஃபர் வழங்கப்படுகிறது

குறிப்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இதுவரை இல்லாத அளவில் நல்ல தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 13 தள்ளுபடி விலையில் 63,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக, வங்கிச் சலுகைகள் ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இதன் விலை ரூ.62,999 ஆக இருக்கும். இதேபோல்  ஐபோன் 14 குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே, நீங்கள் நீண்ட காலமாக ஐபோன் வாங்க காத்திருந்தால், இந்த ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

Flipkart Offer: ஸ்மார்ட்போன்களுக்கு டிச. 16 முதல் சிறப்பு தள்ளுபடி!

இப்போது கேள்வி என்னவென்றால் - இந்த நேரத்தில் நீங்கள் iPhone 13 அல்லது iPhone 14 ஐ வாங்க வேண்டுமா? இதற்கான பதில் எளிது: iPhone 14 க்கும்,  iPhone 13க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  கேமராக்கள், வன்பொருள் மற்றும் பிற அம்சங்கள் என கிட்டத்தட்ட அனைத்துமே ஒன்றாக உள்ளது. ஐபோன் 14 கிட்டத்தட்ட எல்லா வகையிலும் ஐபோன் 13 ஐப் போலவே இருப்பதாகவே ஐபோன் பயனர்கள் பலரும் கூறுகின்றனர். இப்படியான நிலையில், ஐபோன் 14 போனில் உள்ள அதே தரம், குறைந்த விலையில் ஐபோன் 13ல் இருப்பதால், இதையே கருத்தில் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் இன்னும் பழைய ஐபோன் மாடல்களில் ஒன்றை வைத்திருந்தால்.  iPhone XR அல்லது iPhone 11 இருந்தால்,  iPhone 13 க்கு மாறுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் ஐபோன் 12 ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அடுத்த ஆண்டு ஐபோன் 15 தொடங்கும் வரை காத்திருப்பது நல்லது. 
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!