மார்வெல் பிரியர்களே… உங்களுக்காகவே OnePlus நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

By Dinesh TG  |  First Published Dec 15, 2022, 10:22 PM IST

OnePlus நிறுவனம் OnePlus 10T மார்வெல் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்குக் காணலாம்.


OnePlus 10T ஆனது மார்வெல் எடிசன் ஸ்மார்ட்போனானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மார்வெல் எடிசன் பாக்ஸில் சில மார்வெல் பிராண்டட் பொருட்கள் மற்றும் சேகரிப்புகள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இது குறித்து ஒன்பிளஸ் தரப்பில் கூறுகையில், "இந்த OnePlus 10T Marvel Edition மூலம் உங்கள் உள்ளங்கையில் மார்வெலின் சக்தியை வெளிக்கொணரும் நேரம் வந்துவிட்டது. உங்களுக்கு பிடித்த மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் மகத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது"  என்று கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

மார்வெல் எடிஷன் பாக்ஸில் அயர்ன் மேன் ஃபோன் கவர், கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போன்ற வடிவிலான சாக்கெட் மற்றும் பிளாக் பாந்தர் ஸ்டைலிங் கொண்ட மொபைல் ஸ்டாண்ட் ஆகியவை உள்ளன. ரெட் கேபிள் சந்தாதாரர்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ.3000 தள்ளுபடியில் பெற முடியும். எனவே இதன் விலை ரூ.55,999 ஆக குறையும். டிஸ்னி இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இருந்தாலும், இன்னும் அதை வாங்குவதற்கான ஆப்ஷன் வரவில்லை.

OnePlus 10T Marvel பதிப்பு இந்தியாவில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை விற்பனை செய்யப்படும். இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும், எனவே மார்வெல் ரசிகர்கள் உடனடியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இது விற்பனையில் இருக்கும். 

OnePlus 10T ஆனது LTPO தொழில்நுட்பத்துடன், 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ், 120Hz ரெப்ரெஷ் ரேட் , HDR10+ வசதி உள்ளன. முன்பக்கத்தில், செல்ஃபி கேமரா பகுதியில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உள்ளது.

வாட்ஸ்அப் பே, வாட்ஸ்அப் ராஜினாமா, WhatsApp Pay, WhatsApp Resign, WhatsApp Employment

Snapdragon 8+ Gen 1 பிராசசரும், அதனால் ஸ்மார்ட்போன் வெப்பமடைந்தால், கூல் செய்வதற்காக  3D குளிரூட்டும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது, OnePlus 10T ஸ்மார்ட்போனில் 160W சார்ஜிங் வசதி இருப்பதால் வெகு விரைவாக சார்ஜ் ஏறும். நீடித்து உழைக்கும் வகையில் 4,800mAh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது. ஒன்பிளஸ் தரப்பில் இந்த ஸ்மார்ட்போன் 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. 

மேலும், Dolby Atmos , நாய்ஸ் கேன்சலிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளன. கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது, OIS அம்சத்துடன் 50 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX769 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளன.  முன்பக்கத்தில், செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
 

click me!