பல மாத சோதனைக்குப் பிறகு, ஐபோன் 12 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களில் 5G செயல்பாடு இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இந்த நிலையில், உங்கள் ஐபோனில் ஏர்டெல், ஜியோ 5ஜி சேவையை ஆன் செய்வது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவையானது தற்போது பல ஐபோன் மாடல்களில் கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. Jio வழங்கும் "True 5G" சேவையானது, குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களில் இலவசமாக பயன்படுத்தலாம். இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி Jio 5G சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்த போது பேசியிருந்தார். அதன்படி, தற்போது ஜியோ 5ஜி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்கள் 5G திறன் கொண்டதாக இருந்தாலும், ஆப்பிள் போன்ற OEMகள் இந்த அம்சத்தை இயக்க சாப்ட்வேர் அப்டேட் கொண்டு வர வேண்டும். இதனால், கடந்த பல வாரங்களாக, ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்தந்த நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான சர்வர்-சைட் அல்லது OTA அப்டேட் கொண்டு வந்தனர். அந்த வகையில், தற்போது ஆப்பிளும் ஐபோனில் 5ஜி அப்டேட் கொண்டு வந்துள்ளது.
iPhone 12 போன்களில் Airtel, Jio 5G வந்துவிட்டது! 5ஜி சேவையை ஆன் செய்வது எப்படி?
ஐபோனில் 5G ஆன் செய்யும் முறை:
உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் அப்ளிகேஷனைத் திறந்து, General என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன் பிறகு Software Update தேர்ந்தெடுக்கவும்.
iOS 16.2க்கான பதிவிறக்க இணைப்பு இருக்கும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்புக்கொண்ட பிறகு அப்டேட்டை பதிவிறக்கவும்.
நினைவில் கொள்க: டேட்டாவை முழுமையாக பேக்அப் செய்யாமல் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் ஐபோனின் அறிவிப்புப் பகுதியில், அப்டேட் பயன்படுத்தப்பட்டு, ஸ்மாரட்போன் ரீஸ்டார்ட் செய்யப்பட்ட பிறகு புதிய 5G ஐகானைக் காண்பிக்கலாம் (தற்போது Wi-Fi செயலில் இல்லை என்றால்).
இல்லையெனில், செட்டிங்ஸ் பகுதியில் Cellular > Cellular Data Options சென்று அந்த 5ஜி ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் இரண்டு சிம்கள் இருந்தால், செயலில் உள்ள இரண்டு சிம்களில் எதை 5Gக்கு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கும் வகையில், உங்கள் ஐபோன் உங்கள் 5ஜி இன்டர்நெட் வேகத்தை தானாக மாற்ற விரும்பினால், நீங்கள் இயல்புநிலை ஆட்டோ விருப்பத்தை இயக்கலாம்.