ஸ்விக்கியில் போலி டாமினோஸ் பீட்சா விற்பனை... புகாருக்கு என்ன பதில் கிடைச்சுது தெரியுமா?

By SG Balan  |  First Published Feb 15, 2024, 7:51 AM IST

ரவியின் பதிவுக்குப் பதில் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், ரவி ஹண்டாவின் பின்கோடையும் பகிருமாறு கோரி, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.


உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் "Domino's" என்று தேடினால் பல எளிய தேடல் முடிவுகளைக் காட்டுகிறது. அவற்றில் பல டாமினோஸ் பீட்சா பிராண்டைப் போலவே சிறிய மாற்றங்களுடன் உள்ளன. இவ்வாறு டாமினோஸ் பீசா போலி பிராண்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுவது குறித்து பயனர்கள் ட்விட்டரில் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் ரவி ஹண்டா என்ற பயனர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில், கொல்கத்தாவில் உள்ள அவரது முகவரிக்கு அருகில் பல டோமினோஸ் பீட்சா கடைகள் இருப்பதை கவனிக்க முடியும், இருப்பினும், அவை அனைத்தும் வாடிக்கையாளரை ஏமாற்ற வெவ்வேறு எழுத்துப்பிழைகளுடன் போலியாக உள்ளன. ஒரு உணவகம் "டோமினோ பிஸ்ஸா" என்றும் மற்றொன்று "டோமினோஸ் பிஸ்ஸா" என்றும் பெயரிடப்பட்டுள்ளன என்பதைக் காணமுடிகிறது.

Tap to resize

Latest Videos

"தெளிவாக, இது ஒரு மோசடி. இதில் ஒன்று மட்டுமே உண்மையானது. இதை ஏன் அனுமதிக்கிறீர்கள்? ஏன் டாமினோஸ் பிராண்டை அப்பட்டமாக போலி செய்வதைத் தடுக்கவில்லை" என்று ரவி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

ஒன்பிளஸ் 11R மொபைலுக்கு பெஸ்டு டீல்! ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இவ்ளோ கம்மியா கிடைக்காது!

Hey

This is clearly a fraud. Only one of these is genuine. Why are you letting this happen?

Why isn't objecting to blatant violation of trademark. pic.twitter.com/Gv8Lt2rRU8

— Ravi Handa (@ravihanda)

மேலும், "இது வெறும் நகைச்சுவையல்ல. உண்மையில் எனக்கு நெருக்கமான ஒருவர் இதனால் ஏமாந்திருக்கிறார். அவர்கள் டெலிவரி செய்த பெட்டியைப் பார்த்துதான் அதை உணர்ந்தார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்குப் பதில் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், ரவி ஹண்டாவின் பின்கோடையும் பகிருமாறு கோரி, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

இந்தப் பதிவைப் பார்த்த பலர் இன்னும் பல போலிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டு ரிப்ளை செய்துளனர். ஒரு பயனர் Abibas, KFC, Pizza Hut போன்ற பிராண்டுகளும் சிறிய மாற்றங்களுடன் போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

ஏ.டி.எம். போகவே தேவையில்ல... விர்சுவல் ஏ.டி.எம். மூலம் ஈஸியா பணத்தை எடுப்பது எப்படி?

click me!