ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11R ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனை இரண்டு வேரியண்ட்களில் வெளியிட்டது.
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போனான OnePlus 12R ஐ இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ஸ்மார்ட்போனான OnePlus 11R இன் விலையைக் குறைத்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11R ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனை இரண்டு வேரியண்ட்களில் வெளியிட்டது. 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.39,999 மற்றும் 16GB ரேம், 256GB மெமரி மாடலின் விலை ரூ.44,999.
undefined
8GB வேரியண்ட் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.37,999க்கு வாங்கலாம். 16GB வேரியண்ட் விலை ரூ.3,000 குறைந்துள்ளது. ரூ.41,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் OnePlus 11R ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.1,000 ரூபாய் கிடைக்கும்.
இனி டால்பி விஷன், டால்பி அட்மாஸ் கிடையாது... விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் கட்டண உயர்வு!
OnePlus 11R மொபைலில் 6.74-இன்ச் அளவுள்ள 2772×1240 பிக்சல் ரிசல்யூஷன் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 பிராஸசரைக் கொண்டிருக்கிறது. இது வலுவான மற்றும் திறமையான செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை நானோ சிம்களுக்கு இடம் கொடுக்கிறது. பின்பக்க கேமரா அமைப்பு 50MP பிரைமரி ஷூட்டர், 120 டிகிரி 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. 16MP செல்ஃபி கேமரா இருக்கிறது. 100W வேகமான சார்ஜிங் அம்சத்துடன் நீடித்து உழைக்கும் 5000mAh பேட்டரியும் இருக்கிறது.
ஏ.டி.எம். போகவே தேவையில்ல... விர்சுவல் ஏ.டி.எம். மூலம் ஈஸியா பணத்தை எடுப்பது எப்படி?