S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை எக்கச்செக்கமாகக் குறைத்த சாம்சங்!

By SG Balan  |  First Published Feb 10, 2024, 10:44 AM IST

கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் சீரீஸ் மொபைல்களின் விலையைக் குறைத்துள்ளது. இதில் குறிப்பாக கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23+ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000 வரை குறைந்துள்ளது.


சாம்சங் (Samsung) நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி S24 ஸ்மார்ட்போன் சீரீஸை அறிமுகப்படுத்த உள்ளது. கேலக்ஸி S24 ஸ்மார்ட்போன் சீரீஸ் ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் சீரீஸ் மொபைல்களின் விலையைக் குறைத்துள்ளது. இதில் குறிப்பாக கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23+ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.10,000 வரை குறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதனுடன், 10,000 ரூபாய் உடனடி வங்கி தள்ளுபடியையும் வழங்குகிறது. அதாவது கேலக்ஸி S23, கேலக்ஸி S23+ மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா ஆகிய மொபைல்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.20,000 தள்ளுபடியைப் பெறலாம்.

ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் இந்தியாவின் முதல் சி.என்.ஜி. கார் இதுதான்! எப்படி இருக்கு பாருங்க!

சாம்சங் இ-ஸ்டோர் மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்தச் சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8GB ரேம் மற்றும் 128GB மெமரி கொண்ட கேலக்ஸி S23 மொபைலின் விலை ரூ.74,999  யிலிருந்து ரூ.64,999 ஆகக் குறைந்துள்ளது. ரூ.10,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.54999 விலையில் வாங்கலாம். 8GB ரேம் மற்றும் 256GB மெமரி கொண்ட கேலக்ஸி S23 மொபைல் விலை ரூ.79,999 ஆக இருந்தது. இப்போது ரூ.69,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையும் ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.Rs 59,999 விலையில் வாங்கலாம்.

8GB ரேம் மற்றும் 128GB மெமரி கொண்ட கேலக்ஸி S23+ மொபைலின் விலை ரூ.94,999 யிலிருந்து ரூ.84,999 ஆகக் குறைந்துள்ளது. ரூ.10,000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.74999 விலையில் வாங்கலாம். 8GB ரேம் மற்றும் 512GB மெமரி கொண்ட கேலக்ஸி S23+ மொபைல் விலை ரூ.1,04,999 ஆக இருந்தது. இப்போது ரூ.94,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதையும் ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.Rs 89,499 விலையில் வாங்கலாம்.

ரூ.50,000 கம்மியாக கிடைக்கும் ஹூண்டாய் கார்! இந்த ஆஃபர் இன்னும் கொஞ்ச நாள் தான்... ஓடுங்க...

click me!