
நோக்கியா போன்களை தயாரிக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய கீபேட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி ஆகிய இரண்டு கீபேட் போன்களும் முந்தைய மாடலைவிட அதிகமான வசதிகளுடன் வந்துள்ளன.
இந்த 4ஜி மொபைல்கள் இரண்டிலும் இப்போது யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் மற்ற கிளவுட் செயலிகளை பயன்படுத்தும் வாய்ப்பு அறிமுகமாகியுள்ளது. நோக்கியா 106 4ஜி மற்றும் நோக்கியா 110 4ஜி ஆகியவற்றின் விலை முறையே ரூ.2,199 மற்றும் ரூ.2,399 ஆக நிர்ணயர் செய்யப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் மாற்றணுமா?
Nokia 106 4G மற்றும் Nokia 110 4G இரண்டிலும் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவைப் பார்க்கும் வசதி கிடைக்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால், இதை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. கூகுள் கணக்கிற்குள் சென்று விருப்பமான யூடியூப் ஷாட் வீடியோ வகையைத் தேர்வு செய்யும் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது.
கிளவுட் ஆப்ஸ் வசதி மூலம் செய்திகள், வானிலை அறிவிப்பு, கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் கேம்ஸ் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆப்ஸ் அனைத்தும் கிளவுட்டில் இயங்குபவை என்பதால், அவை மிக வேகமாக செயல்படுவதுடன் பயன்படுத்தவும் எளிதானதாக இருக்கும்.
ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்க கூகுள் தாராவுடன் கைகோர்க்கும் ஏர்டெல்! ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆப்பு தான்!
யூடியூப் ஷார்ட்ஸ், பிபிசி ஹிந்தி, சோகோபன், 2048 கேம் மற்றும் டெட்ரிஸ் உட்பட எட்டு வெவ்வேறு செயலிகளை இந்த கீபேட் மொபைல்களில் பயன்படுத்த முடியும். இவற்றுடன் சாப்ட்வேர் அப்டேட்டுக்கும் கிடைக்கிறது.
நோக்கியாவின் பிரபல கீபேட் போன்களில் புதிய வசதிகளைப் புகுத்தி இருப்பது பற்றிக் கூறும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் இந்தியாவுக்கான துணைத் தலைவர் ரவி குன்வார், “நோக்கியா 106 4G மற்றும் நோக்கியா 110 4G மொபைல்களில் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற கிளவுட் ஆப்ஸ் வசதியை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே, கீபேட் மொபைல்களில் UPI மூலம் பேமெண்ட் செய்யும் வசதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற வசதிகளும் கிடைக்கிறது. இந்த மொபைல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறது. அதை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறமது.
மொபைல் ஸ்டோரேஜ் நிரம்பி வழியுதா? வாட்ஸ்அப் செட்டிங்ஸை கொஞ்சம் மாற்றிப் பாருங்க!