பக்கா பேட்டரி... பவர்ஃபுல் பிராசஸர்... ரெனோ 11 சீரீஸ் மொபைல்களை களமிறக்கிய ஓப்போ!

By SG Balan  |  First Published Nov 23, 2023, 7:20 PM IST

சீனாவில் நடந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 11 மற்றும் Reno 11 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் OLED டிஸ்ப்ளேயுடன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன.


Oppo Reno 11 மற்றும் Reno 11 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியாகிவிட்டன. சீனாவில் நடந்த வெளியீட்டு நிகழ்வில் ஓப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo Reno 11 மற்றும் Reno 11 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் OLED டிஸ்ப்ளேயுடன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகின்றன.

ரெனோ 11 மொபைலி விலை இந்திய மதிப்பில் ரூ. 29,675 முதல் ஆரம்பமாகிறது. இது கருப்பு, நீலம் மற்றும் மூன்ஸ்டோன் வண்ணங்களில் கிடைக்கும். ரெனோ 11 ப்ரோவின் விலை இந்திய மதிப்பில் ரூ. 41,100 இல் இருந்துத் தொடங்குகிறது. இது கருப்பு, பச்சை மற்றும் மூன்ஸ்டோன் வண்ணங்களில் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

மீண்டும் கூகுளுக்கு தலைவலி கொடுக்கும் பிக்சல் 8! டிஸ்பிளேயில் குறை சொல்லும் பயனர்கள்!

Hands on OPPO Reno 11 & OPPO Reno 11 Pro, awesome 😎

*Specifications are below, in image form. pic.twitter.com/pmq3IcJWi7

— RAIHAN HAN (@raihanhan121)

Oppo Reno 11 Pro

Oppo Reno 11 Pro ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1+ பிராசஸர், 12GB RAM ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 256GB மற்றும் 512GB என இரண்டு விதமான ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது.

50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் கேமரா இருக்கிறது. 32MP செல்ஃபி கேமரா உள்ளது.  80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

Oppo Reno 11

Oppo Reno 11 ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ColorOS 14 மூலம் செயல்படும் இந்த ஸ்மார்ட்போன் 12GB RAM கொண்டிருக்கிறது 256GB மற்றும் 512GB என இரண்டு விதமான ஸ்டோரேஜுடன் இந்த மொபைலை வாங்கலாம்.

50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமராவும்  32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4,800 mAh பேட்டரி இருக்கிறது.

ரெட்மீ முதல் சாம்சங் வரை... ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் சூப்பர் 5ஜி ஸ்மார்ட்போன்!

click me!