சாம்சங் E700 ஞாபகம் இருக்கா? கேலக்ஸி சீரீஸில் ரெட்ரோ ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன்!

By SG BalanFirst Published Oct 31, 2023, 10:49 AM IST
Highlights

சாம்சங் நிறுவனம் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட E700 மொபைலை நினைவுகூரும் வகையில் கேலக்ஸி சீரீஸில் ரெட்ரோ போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் தனது முதல் ஃபிளிப் போனின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், Samsung Galaxy Z Flip5 Retro என்ற லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 2003இல் சாம்சங் அறிமுகப்படுத்திய முதல் ஃபிளிப் போன் SGH-E700. அதை நினைவுகூரும் விதமாகதான் புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

SGH-E700 மொபைல் இன்டர்னல் ஆண்டெனாவைக் கொண்ட சாம்சங்கின் முதல் மொபைல் ஆகும். இந்த மொபைல், மொபைல் பயன்பாட்டை பரவலாக்கியதுடன் மொபைல் போன் துறையில் சாம்சங்கின் செல்வாக்கை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது அரிய மொபைல் போன்களை சேகரிப்பவர்களையும் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் ஈர்ப்பதாக இருக்கும் என்று சாம்சங் கருதுகிறது.

அதிவேக செயல்திறனுடன் புதிய ஐமேக், லேப்டாப், M3 சிப்! ஆப்பிள் ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் அறிமுகம்!

புதிதாக அறிமுகமாகியுள்ள Galaxy Z Flip5 Retro மொபைல் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் குறைந்த அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவிக்கிறது. இந்த போன் இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இருப்பினும், கடந்த காலங்களில், சாம்சங்கின் பல லிமிடெட் எடிஷன் போன்கள் இந்தியச் சந்தைக்கு வரவில்லை என்பதால் Galaxy Z Flip5 Retro மொபைலும் இந்தியாவிற்கு வருவது சந்தேகம் தான் என்று டெக் வல்லுநர்கள் சொல்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், சாம்சங் அமெரிக்காவிலும் இந்த லிமிடெட் எடிஷன் மொபைலை வெளியிடவில்லை. இதன் விலை எவ்வளவு என்றும் சாம்சங் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.

Galaxy Z Flip5 Retro ஸ்மார்ட்போனாக இருந்தாலும் SGH-E700 மொபைலில் உள்ள தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இண்டிகோ ப்ளூ மற்றும் சில்வர் கலர் ஸ்கீம், பழைய பிக்சல் கிராபிக்ஸ் UI மற்றும் ஃப்ளெக்ஸ் விண்டோவில் ஒரு பிரத்யேக அனிமேஷன் ஆகியவை இருக்கும்.

Galaxy Z Flip5 ரெட்ரோவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லோகோக்கள், பிளிப்ஸூட் கேஸ் ஆகியவற்றைக் கொண்ட கார்டுகஙள் பரிசாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாக் கோல்டு டிசைனில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்! லீக்கான டெஸ்டிங் வீடியோ!

click me!