வரும் நாட்களில், லைட் சந்தாவுக்கு பணம் செலுத்தும் பயனர்கள் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களைப் பார்க்க முடியாமல் போகலாம். டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களும் கிடைக்காது.
அமேசான் நிறுவனம் தனது பேசிக் பிரைம் வீடியோ சந்தாவில் இனி டால்பி விஷன் எச்டிஆர் அல்லது டால்பி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் அம்சங்கள் இருக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம், இந்த சந்தாவில் விளம்பரங்களையும் ஒளிபரப்பத் தொடங்கியது. இப்போது, உயர்தர வீடியோ ஸ்ட்ரீமிங்கையும் நிறுத்திவிட்டது.
இது குறித்து கருத்து கூறியுள்ள அமேசான் செய்தித் தொடர்பாளர் கேட்டி பார்கர், "டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சங்கள் விளம்பரம் இல்லாத சந்தா திட்டத்தில் மட்டுமே கிடைக்கும்" என அவர் கூறியுள்ளார்.
நெட்ஃபிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் பிரைம் போன்ற முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்கள் வருவாய் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. இதை அடைய, அவர்கள் தங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்காக, பாஸ்வேர்டு பகிர்வை கட்டுப்படுத்துவது மற்றும் விளம்பரமில்லாத சந்தா திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.
இனி சார்ஜர் தேவை இல்ல... மொபைலை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும்!
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) இப்போது அமெரிக்காவில் அதன் 4K வீடியோ திட்டத்துக்கு மாதம் 22.99 டாலர் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் இது மாதத்திற்கு ரூ.649 சந்தாவில் கிடைக்கிறது. அமேசானின் 4K திட்டத்தின் மாதாந்திர சந்தா கட்டணம் அமெரிக்காவில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு இந்திய பயனர்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் இந்தியாவில் பிரைம் மற்றும் பிரைம் லைட் ஆகிய இரண்டு சந்தா திட்டங்களை வழங்கப்படுகின்றன. பிரைம் சந்தா திட்டம் மாதம் ரூ.299 (ஆண்டுக்கு 1,499) கட்டணத்தில் விளம்பரங்கள் இல்லாமல் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் அம்சங்கள் கொண்ட 4K வீடியோக்களை வழங்குகிறது. அதே சமயம் பிரைம் லைட் சந்தாவில் HD (720p) வீடியோவை மட்டுமே பார்க்க முடியும். இதன்ற்கு ஆண்டுக்கு ரூ.799 கட்டணம் பெறப்படுகிறது.
வரும் நாட்களில், லைட் சந்தாவுக்கு பணம் செலுத்தும் பயனர்கள் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களைப் பார்க்க முடியாமல் போகலாம். டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களும் கிடைக்காது. ஆனால் பிரைம் லைட் சந்தா இந்திய பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்ற நாடுகளில் பயனர்களுக்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே உள்ளது. அதேபோல இந்தியாவிலும் கொண்டுவரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால், பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் வரும். அப்போது இந்தியாவில் சந்தா கட்டணத்திலும் மாற்றம் செய்யப்படலாம்.
வாட்ஸ்அப்பில் ஸ்பேம் தொல்லையா? லாக் ஸ்கிரீனிலும் பார்த்தவுடன் பிளாக் செய்வது ரொம்ப ஈஸி!