கிராஷ் டெஸ்ட் பற்றிய ஏராளமான குழப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் பொது மக்கள் இடையே பரவி இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கார்களில் பாதுகாப்பு வசதிகள் கடந்த சில ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. மற்ற கார்களை விட சில கார்கள் மட்டும் விபத்து சமயங்களில் சிறப்பான பாதுகாப்பை வழங்குகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் மாடல் குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தியது.
புதிதாக கார் வாங்குவோர் வாகன பாதுகாப்புக்கான தரம் பற்றிய விழிப்புணர்வு இன்றி காரை தேர்வு செய்து விடுகின்றனர். மேலும் வாகன பாதுகாப்பு ரேட்டிங் மற்றும் கிராஷ் டெஸ்ட் பற்றிய ஏராளமான குழப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் பொது மக்கள் இடையே பரவி இருக்கிறது. உண்மையில் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் மற்றும் ரேட்டிங் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
undefined
குளோபல் NCAP:
நியூ கார் அசெஸ்மெண்ட் திட்டம் என்பதன் சுருக்கம் தான் NCAP. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார் மாடல்கள் எந்த அளவு தரமானதாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவில் தான் முதல் முறையாக திட்டம் கொண்டுவரப்பட்டது. 1978 முதல் இந்த திட்டம் அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் கிராஷ் டெஸ்ட் செய்து புள்ளிகள் கணக்கிடப்படும்.
அமெரிக்க NCAP மாடல் உலகின் மற்ற கார் பரிசோதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது. அமெரிக்காவில் உள்ளதை போன்றே ஆஸ்திரேலியா NCAP, யூரோ NCAP, ஜப்பான் NCAP, ASEAN NCAP, சீனா NCAP, கொரியன் NCAP, லத்தீன் NCAP மற்றும் குளோபல் NCAP என பல்வேறு திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
லண்டனில் பதிவு செய்யப்பட்ட தனித்துவ தொண்டு அமைப்பாக குளோபல் NCAP செயல்பட்டு வருகிறது. பல்வேறு NCAPகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
கிராஷ் டெஸ்டிங்:
பல்வேறு NCAP-களில் கார்கள் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு, அதற்கு ஏற்ப பல விதங்களில் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுகின்றன. குளோபல் NCAP இந்தியாவில் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது காரை மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் தடுப்பான் மீது மோத வைக்கப்படும். டெஸ்டிங் மோடில் ஒரே அளவிலான எடை பயன்படுத்தப்படுகிறது.
குளோபல் NCAP விதிமுறைகள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படும். குளோபல் NCAP-இல் டெஸ்டிங் செய்யப்படும் கார்கள் ஐந்து நட்சத்திரங்களால் ரேட்டிங் செய்யப்படுகின்றன. இவை கிராஷ் டெஸ்ட் டம்மிக்கள் பெறும் ரீடிங் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. சமயங்களில் கார்களில் விசேஷ பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால், சிறப்பு புள்ளிகளும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 5-ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்கள்:
புது வாகனம் வாங்கும் போது பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என நினைக்கின்றீர்களா? இந்திய சந்தையில் பாதுகாப்புக்காக 5-ஸ்டார் பெற்ற கார்களின் பட்டியலை கீழே காணலாம்.
டாடா பன்ச் (GNCAP - 5 ஸ்டார்கள்)
மஹிந்திரா XUV300 (GNCAP - 5 ஸ்டார்கள்)
டாடா அல்ட்ரோஸ் (GNCAP - 5 ஸ்டார்கள்)
டாடா நெக்சான் (GNCAP - 5 ஸ்டார்கள்)
மஹிந்திரா XUV700 (GNCAP - 5 ஸ்டார்கள்)