முன்னதாக eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் முழு எலெக்ட்ரிக் கார் மாடலான மஹிந்திரா eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா eXUV300 எஸ்.யு.வி. 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த எலெக்ட்ரிக் கார் பிரீ-ப்ரோடக்ஷன் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டப்படி புது எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் புதிய eXUV300 மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி, அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த ஆண்டே அறிவித்து இருந்தது.
அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள்:
புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று உள்ள. இது மட்டும் இன்றி, மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயன்படுத்த மஹிந்திரா மற்றும் போக்ஸ்வேகன் நிறுவனங்கள் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டும் கொண்டிருக்கும்.
விலை விவரங்கள்:
தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடலின் விலை நெக்சான் EV மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என துவங்குகிறது. மஹிந்திரா வாகனம் சற்றே நீளமாக இருக்கும் என்பதால், இதன் விலை அதிகமாக நிர்ணம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
எனினும், மஹிந்திரா eXUV300 விலை அதில் வழங்கப்படும் பேட்டரி, மோட்டார்கள் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். மேலும் எலெக்ட்ரிக் வாகனம் என்பதால் இந்த மாடல் ரேன்ஜ், திறன் என பல்வேறு விஷயங்களில் அதிக தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிகிறது.