மொபைல் பயனர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சீர்திருத்தங்கள்! KYC, (PoS) முறைகளில் மாற்றம்!

By SG Balan  |  First Published Aug 17, 2023, 8:56 PM IST

வாடிக்காளர் தகவல்களைச் சரிபார்ப்பதற்கான KYC முறை மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பதிவு முறை ஆகிய இரண்டிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.


வாடிக்கையாளர் பாதுகாப்பின் தரத்தைப் உயர்த்தும் வகையில் மத்திய அரசு இரண்டு முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக தகவல் தொடர்பு, ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செயதிக்குறிப்பின்படி, வாடிக்காளர் தகவல்களைச் சரிபார்ப்பதற்கான KYC முறை மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) பதிவு முறை ஆகிய இரண்டிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. சைபர் கிரைம்கள் மற்றும் நிதி மோசடிகளின் அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் தொடங்கிய சஞ்சார் சாதி இணையதளத்தைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

மொபைல் பயனர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை அளிக்கும் வகையில் கடந்த மே 17ஆம் தேதி உலக தொலைத்தொடர்பு தினத்தில் ‘சஞ்சார் சாதி’ போர்டல் இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மொபைல் பயனர்களுக்கு தங்கள் பெயரில் உள்ள எண்களைச் சரிபார்த்தல், தங்களுக்குத் தெரியாமல் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட எண்களை முடக்குதல் போன்ற பல வசதிகளைக் கொடுக்கிறது.

உங்க மொபைலுக்கும் இதே மாதிரி எமர்ஜென்சி அலர்ட் வந்துச்சா? இதுக்கு என்ன அர்த்தம்?

பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) சீர்திருத்தங்கள்:

இந்த சீர்திருத்தம் உரிமதாரர்கள் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கான செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சீர்திருத்தம் மோசடியான நடைமுறைகள் மூலம் சமூக விரோதிகளுக்கு சிம்கார்டுகள் வழங்கப்படுவதைத் தடுக்க உதவும்.

PoS மூலம் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், 3 ஆண்டுகளுக்கு செயல்பாடு நிறுத்தப்பட்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும். தற்போதுள்ள அனைத்து PoS களும் 12 மாதங்களுக்குள் உரிமதாரர்களால் இந்த செயல்முறையின்படி பதிவு செய்யப்படும்.

நிகழ் இல்லாத நாள்! நிழல்கள் காணாமல் போகும் அரிய வானியல் நிகழ்வு! மிஸ் பண்ணாம பாருங்க!

KYC சீர்திருத்தங்கள்:

KYC என்பது ஒரு வாடிக்கையாளருக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு முன், அவரது தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்வதற்கான செயல்முறை ஆகும். தற்போதுள்ள KYC செயல்முறையை வலுப்படுத்துவது தொலைத்தொடர்பு சேவைகளின் சந்தாதாரர்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்கும்.

அச்சிடப்பட்ட ஆதாரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, ஆதாரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து அதில் உள்ள விவரங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படும். மொபைல் எண் காலாவதி ஆனாலும், அந்த எண் 90 நாட்கள் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் ஒதுக்கப்படாது. வாடிக்கையாளர் தனது சிம்மை மாற்றுவதற்கு முழுமையான KYC நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். மாற்றத்திற்கு முன்பும் பின்பும் 24 மணிநேரம் எஸ்எம்எஸ் (SMS) அனுப்புவதிலும் பெறுவதிலும் கட்டுப்பாடு இருக்கும்.

ஆதார் KYC இல் கைவிரல் ரேகை பதிவுக்கு மாற்றாக கருவிழி, முகத்தை அடிப்படையாகக் கொண்ட பயோமெட்ரிக் அங்கீகாரமும் அனுமதிக்கப்படுகிறது. ஒரு நிறுவனம் எத்தனை வணிக மொபைல் இணைப்புகளையும் பெறலாம். ஆனால், அதனை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் முழு KYC ஐ சரிபார்ப்பை நிறைவு செய்யவேண்டும்.

சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

click me!